அமெரிக்க மருத்துவ இயற்பியலாளர் சங்கம்

அமெரிக்க மருத்துவ இயற்பியலாளர் சங்கம் (AApM- American association of physicist in medicine) என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை சார்ந்த ஒருஅமைப்பாகும்.[1] இச்சங்கம் 1958ல் தொடங்கப்பட்டது. 8000 உறுப்பினர்களைக் கொண்டது. மருத்துவத் துறையில் இதன் உறுப்பினர்கள் பொதுவாக கதிர்வீச்சின் செயல்பாடுகள், கதிர்படம் எடுத்தல், கதிர்மருத்துவம், துல்லியமாக கதிர்வீச்சினைக் கையாள்வது, பதுகாப்பாகச் செயல்படுவது முதலியவற்றைக் கண்காணிக்கிறார்கள். மருத்துவத்தின் பலதுறைகளிலும் அவர்களின் பங்களிப்புள்ளது. மருத்துவத்திற்கும் தொழில்நுட்பனர்களுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளனர். துறைசார்ந்த கல்வியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபாடுடையவர்கள். நோயாளியின் பாதுகாப்பு இவர்களின் முக்கிய பணியாகும். பன்னாட்டு மருத்துவ இயற்பியலாளர் அமைப்பின் (IOMP) உறுப்பு நாடாகவும் உள்ளது.

மருத்துவ இயற்பியல் பற்றிய அறிவைப் பரப்புவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. மருத்துவ இயற்பியல் சஞ்சிகை இவர்களால் வெளியிடப்படுகிறது. அமெரிக்க மருத்துவ இயற்பியல் கல்லூரி (American college of medical physics- ACMP ) பட்டம் வழங்குகிறது. இப்பட்டம் இல்லாமல் அமெரிக்காவில் மருத்துவ இயற்பியலாளராக பணியில் சேரமுடியாது.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Physicists: Fear of Diagnostic Radiation Is Overblown, U.S. News & World Report - Jan 17, 2012
  2. "Finding Aid to the American College of Medical Physics (ACMP) records, 1982-2010".
  3. "American College of Medical Physics". acmp.org. Archived from the original on 2 January 2013. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.