![]() | |
குறிக்கோளுரை | Purificatus non consumptus (Purified but not consumed) பொன்னை உருக்குவது பொசுக்குவதற்கல்ல |
---|---|
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 1881 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | NAAC Five Star |
இணையதளம் | www.americancollege.edu.in |
அமெரிக்கன் கல்லூரி மதுரையில் அமைந்துள்ள மிக பழமையான கல்லூரியாகும். இது 1881 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மதுரையில் 1881 ஆம் ஆண்டு தி அமெரிக்கன் மதுரா மிஷனால் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் தென் தமிழகத்தின் ஒரே கல்லூரி என்பதும் இந்த கல்லூரியின் தனி சிறப்பு. தொடக்கத்தில் அமெரிக்க ஆசிரியர்களால் நிர்வகிக்கபட்டு வந்த கல்லூரி இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு பல மாற்றங்களை கண்டது. அதன்பிறகு ஆசிரியர்கள் முதல்வர்கள் என பல மட்டங்களிலும் இந்தியர்கள் சேர்க்கப்பட்டு முற்றிலும் திறமையான உள்ளூர் ஆசிரியர்களால் இன்றுவரை கற்பிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பி.ஏ., பிரிவுகளும் அதன் பிறகு பி.எஸ்சி., படிப்புகளும் சேர்க்கப்பட்டன. மதுரைவாசிகள் மத்தியில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ளவர்களும் நன்கு அறிந்த கல்லூரியாகவும் இருக்கிறது.
கல்வியைப் பரப்புவதன் மூலம் மக்களின் அறியாமையைப் போக்கலாம் என்ற நோக்கத்தில் அமெரிக்க கிறிஸ்தவ மிசனால், 1881 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சிறிய பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளில் பள்ளியின் அமைவிடம் மதுரை பசுமலைக்கு மாற்றப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் பள்ளிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அமெரிக்கன் கல்லுரி என்ற பெயரில் மதுரையையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் சேர்ந்த மக்களின் நலனுக்காக ஒரு கல்லூரி உருவாக்கப்பட்டது. மதுரை நகரிலிருந்து பசுமலை வந்து செல்ல மாணவர்கள் மத்தியில் இருந்த தயக்கத்தை போக்கும் விதமாக வைகை ஆற்றுக்கு வடக்கே தற்போதைய அமைவிடத்தில் இடம் வாங்கப்பட்டு புதிய கல்லூரி வளாகம் அமைக்கப்பட்டது. 1900களின் தொடக்கத்தில் தற்போதைய அமைவிடத்துக்கு கல்லூரி இடம் மாற்றப்பட்டு இன்று வரை செயற்பட்டு வருகிறது. புதிய வளாகம் வாங்குவதற்காக அமெரிக்க கிறிஸ்தவ மிசனிடம் பெறப்பட்ட நிதி ஜான் டேவிசன் ராக்பெல்லர் என்ற உலகின் முதல் எண்ணை அதிபரின் நன்கொடை ஆகும். இந்தியாவில் முதன் முறையாக மூன்றாம் பாலின இலக்கியம் அமெரிக்கன் கல்லூரியில் தான் அறிமுகப்படுத்தபட்டது. பால்புதுமையருக்கான (Genderqueer) தமிழ் சொற்கள் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர்[1] வழியாக இங்கு கண்டறியப்பட்டன.