பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமெரிசியம் செசுகியுவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12254-64-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22506319 |
| |
பண்புகள் | |
Am2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 534.00 g·mol−1 |
அடர்த்தி | 11.77 |
உருகுநிலை | 2,205 °C (4,001 °F; 2,478 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கியூரியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமெரிசியம்(III) ஆக்சைடு (Americium(III) oxide) என்பது Am2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியத்தின் ஆக்சைடு உப்பான இது அமெரிசியம் செசுகியுவாக்சைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அமெரிசியம்(III) ஆக்சைடு இயற்கையில் தோன்றுவதில்லை. இதன் ஓரிடத்தான்கள் அனைத்தும் செயற்கை முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன. படிகக்கட்டமைக்கு ஏற்றபடி இச்சேர்மத்தின் நிறம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறங்களாக மாறுபடுகிறது. பொதுவாக அமிலங்களில் அமெரிசியம்(III) ஆக்சைடு கரைகிறது. [1]
அமெரிசியம் டையாக்சைடை ஐதரசன் வாயுவின் முன்னிலையில் 600° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் அமெரிசியம்(III) ஆக்சைடு உருவாகிறது. [2]
அறுகோணவடிவம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், கனசதுர வடிவம் சீமைப் பனிச்சை போன்ற செம்பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. [2] கனசதுர வடிவ அமெரிசியம்(III) ஆக்சைடை 800°செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலமாக மாற்றலாம்..[2] மேலும், கனசதுர வடிவமானது விகிதவியல் அளவு ஏதுமின்றி ஆக்சிசனை உட்கூறாகப் பெற்றுள்ளது. ஆக்சிசனின் அதிகரிப்புக்கு ஏற்ப நிறம் மேலும் அடர்த்தியாக மாறுகிறது.[2]