அமோசு பி. சுமித் III Amos B. Smith III | |
---|---|
பிறப்பு | ஆகத்து 26, 1944 |
வாழிடம் | பென்சில்வேனியா |
துறை | கரிமவியல், உயிர்க்கரிமவியல், பொருளியல் வேதியியலாளர், வேதியியல் |
பணியிடங்கள் | பென்சில்வேனியா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ராக் பெல்லர் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | வில்லியம் சி. அகோசுட்டா |
அறியப்படுவது | இயற்கைப் பொருட்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு வினை |
விருதுகள் | பெர்கின் பரிசு |
அமோசு பி. சுமித் III (Amos B. Smith III) ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். 1944 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
சிக்கலான இயற்கை பொருட்கள் உற்பத்தியின் ஒட்டு மொத்த தொகுப்பு மற்றும் பாலூட்டிகளின் இனக்கவர்ச்சி இயக்குநீர் வேதியியல் ஆகியவற்றில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.
தற்போது மோனெல் வேதியியல் இயலுணர்வு மையத்தில் [1] பணிபுரிந்து வருகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் வேதியியலின் ரோட்சு-தாம்சன் பேராசிரியர் பதவியை வகித்து வருகிறார். [2]
அமோசு பி. சுமித் III அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கல்விக்கூடத்திலும், பாரிசு தொழிற்சாலை இயற்பியல் மற்றும் வேதியியல் உயர் கல்வி நிறுவனத்திலும் உறுப்பினராக உள்ளார். [3]
2015 ஆம் ஆண்டு ராயல் வேதியியல் சமூகத்தின் கரிம வேதியியலுக்கான பெர்கின் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. புதிய கரிமவேதியியல் வினை வளர்ச்சி, சிக்கலான இயற்கைப் பொருட்கள் தயாரிப்புக்கான ஒட்டுமொத்த தொகுப்பு மற்றும் மருத்துவ வேதியியலுக்கான புதிய சிறிய மூலக்கூறுகள் ஆகியவற்றிற்கான இவரது சிறந்த பங்களிப்புகளுக்காக" இவ்விருது வழங்கப்பட்டது. [4]