பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டை அமோனியம் மாலிப்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13106-76-8 | |
ChEBI | CHEBI:91249 |
பப்கெம் | 61578 |
பண்புகள் | |
(NH4)2MoO4 | |
வாய்ப்பாட்டு எடை | 196.02 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1870 மி.கி/கி.கி (முயல், வாய்வழி) 2200 மி.கி/கி.கி (கினியா பன்றி, வாய்வழி) 1600 மி.கி/கி.கி (பூனை,வாய்வழி)[1] |
LDLo (Lowest published)
|
120 மி.கி மோல்/கி.கி (எலி, வாய்வழி) 120 மி.கி மோல்/கி.கி (கினியா பன்றி, வாய்வழி)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் ஆர்த்தோமாலிப்டேட்டு (Ammonium orthomolybdate) என்பது (NH4)2MoO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினம் மூவாக்சைடுடன் நீர்த்த அமோனியா கரைசல் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக அமோனியம் ஆர்த்தோமாலிப்டேட்டு தயாரிக்கமுடியும். இவ்விரு கரைசல்களையும் தொடர்ந்து சூடாக்குவதன் மூலமாக அமோனியா இழக்கப்பட்டு அமோனியம் எப்டா மாலிப்டேட்டு அல்லது அமோனியம் எழுமாலிப்டேட்டு ((NH4)6Mo7O24.4H2O) உருவாகிறது. அரித்தலைத் தடுக்கும் வேதிப் பொருளாக அமோனியம் ஆர்த்தோமாலிப்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. தாதுக்களில் இருந்து மாலிப்டேட்டைப் பிரித்தெடுக்கும் சில வழிமுறைகளில் இடைநிலை வேதிப் பொருளாக பயன்படுகிறது [2].
அமோனியம் ஆர்த்தோமாலிப்டேட்டு திண்மத்தை சூடாக்கினாலும், அல்லது அமிலத்துடன் சேர்த்து சூடாக்கினாலும் மாலிப்டினம் மூவாக்சைடு உருவாகிறது. அமோனியம் டைமாலிப்டேட்டு உருவாதல் வழியாக இத்தகைய வினைகள் நிகழ்கின்றன. தாதுக்களில் இருந்து மாலிப்டினம் சுத்திகரிக்கப்படும் போது இச்சமநிலை பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அமோனியம் ஆர்த்தோமாலிப்டேட்டின் நீர்த்த கரைசல் ஐதரசன் சல்பைடுடன் வினைபுரிந்து அமோனியம் டெட்ராதயோமாலிப்டேட்டு உருவாகிறது : (NH4)2MoO4 + 4 H2S → (NH4)2MoS4 + 4 H2O
.