அம்ஷன் குமார் | |
---|---|
பிறப்பு | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
பணி | இயக்குநர் (திரைப்படம்) மற்றும் எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995 – தற்போது |
அம்ஷன் குமார் (Amshan Kumar) ஒரு இந்திய ஆவணப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். 2015 ஆம் ஆண்டில் தனது ஆவணப்படமான யாழ்பாணம் தட்சனாமூர்த்தி - எல்லைக்கு அப்பாற்பட்ட இசை என்ற படத்திற்காக தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார்.[1][2] கடந்த 17 ஆண்டுகளில் தேசிய விருதை வென்ற ஒரு தனி தமிழ் புனைகதை அல்லாத படம் இது.[3] அம்ஷன் குமார் திரைப்படங்களில் ஒரு எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இவரது சினிமா ரசனை புத்தகம் பல பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.[4]
இவரது முதல் திரைப்படமான ஒருத்தி 2003 சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டு இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.[5][6] அவரது இரண்டாவது திரைப்படமான மனுசங்கடா, 39 வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவிலும், இந்திய பனோரமா பிரிவில் இந்தியாவின் 48 வது சர்வதேச திரைப்பட விழாவிலும் (2017) திரையிடப்பட்டது.[7][8] இவர் சென்னையில் வசிக்கிறார்.
அம்ஷன் குமார் இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். பாதல் சர்க்காரின் தேர்டு தியேட்டர், மாடர்ன் ஆர்ட் போன்ற ஆவணப்படங்கள் முக்கியமானவை.[9] சதுப்புநில காடுகள், சி.வி.ராமன், உ.வெ. சாமிநாத ஐயர், சுப்ரமணிய பாரதி மற்றும் எஸ் .ரங்கராஜன் ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். கி. ராஜநாராயணன் எழுதிய ஒரு சிறு நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒருத்தி என்ற திரைப்படத்தை இயக்கினார். அம்சன் குமார் முதன்முதலாக இயக்கிய ஒருத்தி படமே இந்திய பனோரமாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படம் புதுச்சேரி அரசு மற்றும் நியூ ஜெர்சியின் தமிழ் சங்கத்தின் சிறந்த திரைப்பட விருதுகளை வென்றது.[10] தவில் வித்வான் யாழ்பாணம் தெட்சனாமூர்த்தி குறித்த இவரது ஆவணப்படம் 2015 இல் சிறந்த கலை / கலாச்சார திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.[11] 17 ஆண்டுகளில் தேசிய விருதை வென்ற முதல் தமிழ் ஆவணப் படம் இது.[12]
இவரது இரண்டாவது திரைப்படமான மனுசங்கடா கோவா சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது, அந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ் படம் இதுவாகும்.[13] இந்த படம் ஜியோ மாமி மும்பை திரைப்பட விழாவில் [14] உலக கெய்மரையும், கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் அதன் சர்வதேச பிரீமியரையும் கொண்டிருந்தது.[15][16]