அம்பா மலைக்கணவாய்

அம்பா கணவாய்
கணவாய்க்கு அருகில் அம்பா குக்கிராமத்திற்கு அருகில் ஒரு ஓடை.
அமைவிடம்மகாராட்டிரம், இந்தியா
மலைத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை

அம்பா மலைக்கணவாய்  (Amba Ghat) என்பது இந்தியாவின், மகராட்டிர மாநிலம் இரத்தினகிரி-கோலாப்பூர் சாலையில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். இந்த சாலை கடல் மட்டத்திலிருந்து 2000அடி உயரத்தில் அமைந்துள்ளது.[1] இக்கணவாய் சகாயத்திரி மலைத்தொடரில் (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) அமைந்துள்ளது. மேலும், இம்மலை கண்களை கவரும்படியாகவும், இரம்மியமான காலநிலையையும் கொண்டது. இது கோலாப்பூர் மாவட்டத்தின் ஷாஹுவாடிக்கு அருகில் அமைந்துள்ளது.[2]  பாவன்கிந்து மற்றும் விசால்காத் ஆகியவை அருகே உள்ள புகழ் பெற்ற இடங்களாகும். கொல்காப்பூரில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாகும்.

இப்பகுதி பாராகிளைடிங் விளையாட்டுக்கான இடமாகவும் மாறியுள்ளது.[3]

குறிப்புகள்

[தொகு]