அம்மர் லாகசு (Hammar Lacus ) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும்[1]
48.6°வ மற்றும் 308.29° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் [2] டைட்டனின் மேற்பரப்பில், குறுக்களவில் 200 கிலோமீட்டர் விட்டமும், 18600 கிலோமீட்டர் 2 பரப்பளவும்[3] கொண்டுள்ளதால் டைட்டனில் உள்ள மூன்றாவது பெரிய ஏரியாக அம்மர் ஏரி கருதப்படுகிறது. திரவ ஈத்தேனும் மீத்தேனும் [4] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. ஈரான் நாடிலுள்ள அம்மர் ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு அம்மர் லாகசு என்று பெயரிடப்பட்டது. உலகளாவிய வானியல் ஒன்றியம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 3 இல் இப்பெயரை அங்கீகரித்தது.[2]