அயோத்தி வானூர்தி நிலையம் மரியாதை புருசோத்தம ராமர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை நிறுவனம் | ||||||||||
உரிமையாளர் | இந்திய அரசு | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | அயோத்தி & பைசாபாத் | ||||||||||
அமைவிடம் | பைசாபாத், அயோத்தி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 102 m / 335 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 26°45′12″N 082°09′01″E / 26.75333°N 82.15028°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
அயோத்தி வானூர்தி நிலையம் (Ayodhya Airport) கட்டுமானத்தில் உள்ள இதனை அலுவல்பூர்வமாக மரியாதை இராமர் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைப்பர்[1][2][3] இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களுக்கு வானூர்தி சேவைகள் வழங்குகிறது.[4][5] தேசிய நெடுஞ்சாலை எண் 27 மற்றும் 330ல் உள்ள பைசாபாத் நகரத்திற்கு அருகில் அயோத்தி வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச அரசுடன் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இணைந்து பிப்ரவரி 2014ல் இந்த பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.[6][7] இவ்வானூர்தி நிலையம் அமைக்க, நிலத்தை கையகப்படுத்துவதற்கு மட்டும் இந்திய அரசு ரூபாய் 2 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.[7]
280 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வானூர்தி நிலையத்தின் விமான ஓடுபாதை 3,500 மீட்டர் நீளமும்[8]; 45 மீட்டர் அகலமும் கொண்டது.[9] சன்வரி 2024ல் திறக்கப்படவுள்ள இவ்வானூர்தி நிலையத்திலிருந்து நாள்தோறும் 150 விமானங்கள் வந்து செல்ல உள்ளது.[10]
முதலில் தில்லி-அயோத்தி இடையே ஏர் இந்தியாவின் சேவைகள் 30 டிசம்பர் 2023 முதல் துவங்குகிறது.[11]