அய்ஜாஸ் அகமது (Aijaz Ahmad, 1941 - 9 மார்ச் 2022) என்பவர் இந்தியாவில் பிறந்த மார்க்சிய மெய்யியலாளர், இலக்கியக் கோட்பாட்டாளர், அரசியல் விமர்சகர் ஆவார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், இர்வின் மனுடவியல் பள்ளியின் ஒப்பீட்டு இலக்கியத் துறையின் பேராசிரியராக இருந்தார். [1]
மார்க்சிய மெய்யியலில் நின்று உலக நிகழ்வுகளை, உரிமைப் போராட்டங்களை, இடதுசாரி இயக்கங்களின்
சாதக பாதக அம்சங்களை அலசி ஆராய்வதில் அய்ஜாஸ் அகமதுவின் காலத்தில் தன்னிகரற்ற சிந்தனையாளராக செயல்பட்டார். பொதுவுடமை அமைப்புகளின் செயல்பாடுகளை திறணாய்வு செய்யும் அதே வேளையில், மார்க்சியத்தின் இயங்கியல் அடிப்படையில் செல்ல வேண்டிய பாதைகளுக்கான ஒளியை சிறந்த முறையில் பாய்ச்சுவார்.
இந்தியாவில் பின்நவீனத்துவக் கோட்பாடு அறிமுகமானபோது, பல மார்க்சியச் சிந்தனையாளர்களெல்லாம் அதை வியந்து விதந்தோதத் தொடங்கியபோது, பின்நவீனத்துவக் கோட்பாடு உண்மையில் மார்க்சியச் சிந்தனைக்கு முந்தைய சிந்தனைப் போக்கு (Postmodernism is Pre-Marxism) என எடுத்துரைத்தார். மார்க்சிய பொதுவடமைக் கட்சியின் மையக் குழு உறுப்பினர்களுக்குப் பின்நவீனத்துவம் குறித்து இவர் பாடம் எடுத்தார்.[5]
அகமது தனது 81வது வயதில் 2022 மார்ச் 9 அன்று கலிபோர்னியாவின் இர்வின் நகரில் காலமானார். மூப்பு தொடர்பான நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். [2][6]