அய்யாகரி சம்பாசிவ ராவ் Ayyagari Sambasiva Rao | |
---|---|
பிறப்பு | 20 செப்டம்பர் 1914 மொகல்லு, மேற்கு கோதாவரி மாவட்டம் |
இறப்பு | 31 அக்டோபர் 2003 ஐதராபாத்து (இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி | இயற்பியல் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பனாரசு இந்து பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசம், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
விருதுகள் | பத்ம பூசண் விருது |
அய்யாகரி சம்பாசிவ ராவ் (Ayyagari Sambasiva Rao) ஒர் இந்திய விஞ்ஞானியவார். ஏ.எசு.இராவ் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலம் 1914 முதல் 2003 வரையுள்ள காலமாகும். தெலுங்கானா மாநிலத்திலுள்ள மின்னணுவியல் நிறுவனத்தின் நிறுவனரும் இவரேயாவார்.
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும் இசுடான்போர்ட்டு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முதுநிலை பட்டமும் முடித்தார். [1][2]
அணுசக்தியின் அமைதியான பயன்பாடுகளைப் பற்றிய ஐ.நா. மாநாடுகள் உட்பட அறிவியல் வளர்ச்சி குறித்த பல பன்னாட்டு மாநாடுகளில் ராவ் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பல பன்னாட்டு பத்திரிகைகள் உட்பட பல அறிவியல் பத்திரிகைகளின் தலையங்கம் மற்றும் ஆலோசனைக் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.
தேசத்திற்காக இவர் செய்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக ராவிற்கு பல விருதுகளும் கௌரவங்களும் கிடைத்தன. [2]
இவரது பெயர் சூட்டப்பட்ட ஏ.எசு. ராவ் நகர் ஐதராபாத்தின் ஒரு முக்கிய புறநகர்ப் பகுதியாகும். [4] ராவ் தொடர்பாக தி மேன் வித் எ விசன் என்ற சுயசரிதையை இவரது நண்பர் டி. மோகனா ராவ் எழுதியுள்ளார். [5]