வகை | இருபாலருக்கான அரசு தன்னாட்சிக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1852 |
முதல்வர் | வி. கலைச்செல்வி |
அமைவிடம் | , , |
வளாகம் | 13.6 ஏக்கர் |
சேர்ப்பு | பாரதியார் பல்கலைக்கழகம்[1] |
இணையதளம் | http://www.gacbe.ac.in/ |
அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் (Government Arts College, Coimbatore) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரின் மையத்தில் 13.6 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மிகத்தொன்மையான கல்வி நிலையங்களில் ஒன்றாகும். தன்னாட்சித் தகுதி[2] பெற்ற இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக உள்ளது.[3].மத்திய மனிதவளத் துறை 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இக்கல்லூரி 33 ஆவது இடம் பிடித்தது.[4]
1852 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கான பள்ளியாக இக்கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் 1861-ஆம் ஆண்டில் இப்பள்ளி ஓர் இடைநிலைப் பள்ளியாக மாறியது. அதன் பிறகு, 1867-ஆம் ஆண்டில் ஓர் உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்வு பெற்றது. தொடர்ந்து 1868 ஆம் ஆண்டு முதல் இளங்கலை படிப்பிற்கு முன்னதான துவக்கக்கலை வகுப்புகள் இங்கு தொடங்கப்பட்டன. 1870 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை கல்லூரியாக உயர்த்தப்பட்டது. சென்னை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் முன்னரே 1964 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி முதுகலை கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டது. இக்கல்லூரியின் மாணவர்கள் இந்திய விடுதலை இயக்கத்திலும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)