நூலாசிரியர் | பாறப்புறத்து |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வெளியீட்டாளர் | டி. சி. புக்க்ஸ் |
பக்கங்கள் | 243 |
அரநாழிகநேரம் (அரை நாழிகை நேரம்) என்பது மலையாள எழுத்தாளரான பாறப்புறத்து என்பவர் எழுதிய புதினம். இது 1967-ல் வெளியாகி, 1968-ல் கேரள சாகித்திய அக்காதமி விருது பெற்றது. [1]
சி. போள் வர்க்கீஸ், டைம் டு டை என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [2]
இது இதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் இதன் முதன்மை கதாப்பாத்திரமான குஞ்ஞோனாச்சனாக வேடமிட்டார். இத்திரைப்படத்தில் "சமயமாம் ரதத்தில் ஞான் சுவர்க்கயாத்ரசெய்யுன்னு" என்று தொடங்கும் கிரிஸ்தவ பாடல் ஜி. தேவராஜனின் இசையமைப்பில், பி. லீலா, மாதுரி ஆகியோர் குரலில் வெளியானது.