அரவிந்த் குமார் சர்மா (Arvind Kumar Sharma) (பிறப்பு 12 அக்டோபர் 1963) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ரோஹ்தாக் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து 17 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 15 வது மக்களவையில் ஹரியானாவின் கர்னல் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2019 ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [1]
2014 ஆம் ஆண்டில், அவர் இந்திய தேசிய காங்கிரஸை விட்டு வெளியேறி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் யமுனாநகர் மற்றும் ஜூலானா ஆகிய இரு இடங்களிலிருந்தும் தோற்றார் மற்றும் இரண்டு இடங்களிலும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
2019 ஆம் ஆண்டில், இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 2019 இந்திய பொதுத் தேர்தலில் ரோஹ்தக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசின் தீபேந்தர் சிங் ஹூடாவை 7,503 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2] [3]