அரவிந்த் சிதம்பரம் Aravindh Chithambaram | |
---|---|
![]() 2016இல் அரவிந்த் சிதம்பரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | செப்டம்பர் 11, 1999 திருநகர், தமிழ்நாடு, இந்தியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (2015) |
பிடே தரவுகோள் | 2611 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2641 (மார்ச் 2020) |
தரவரிசை | தரவரிசை 118 (சனவரி 2021) |
அரவிந்த் சிதம்பரம் (Aravindh Chithambaram, பிறப்பு:11 செப்டம்பர் 1999) இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். இவர் 2018 மற்றும் 2019 இல் இரண்டு முறை இந்திய சதுரங்க வாகையாளாராவார்.
அரவிந்த் 1999ஆம் ஆண்டு திருநகரில் பிறந்தார்.[1] [2]இவரின் மூன்று வயதில் இவரது தந்தை இறந்தார். அரவிந்த் சிதம்பரத்தின் தாயார் குடும்பத்தை பராமரிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவராக பணியாற்றினார். அரவிந்த் தொடர்ந்து மற்ற சிறுவர்களுடன் துடுப்பாட்டம் விளையாடியதால், இவரை வீட்டிற்குள் வைத்திருக்க அவரது தாத்தா இவருக்கு ஏழு வயதில் சதுரங்கம் கற்றுத் தந்தார். [3]
அரவிந்த் 12 வயதில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய சதுரங்க வாகையாளாரானார். இவர் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சதுரங்க விளையாட்டில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். [4]
2013 இல் சென்னை கிராண்ட்மாஸ்டர் சர்வதேச ஓபனில் 2728 ஈலோ செயல்திறன் மதிப்பீட்டு அளவில் விளையாடி , 9/11புள்ளிகள் பெற்று, தனது முதல் பெரிய போட்டியில் வென்றார். இந்தபோட்டியில் நான்கு கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் இரண்டு சர்வதேச மாஸ்டர்களை தோற்கடித்தார். [3] இந்த முடிவு இவருக்கு முதல் கிராண்ட்மாஸ்டர் நெறியைப்பெற்றுத் தந்தது ; அந்த நேரத்தில் இவர் தனது சர்வதேச மாஸ்டர் விதிமுறைகளை அடையவில்லை. [4]
அவர் 2014 இல் தனது சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் 2015 இல் அவரது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் பெற்றார். [5] [6]
பெப்ரவரி 2018 இல், அவர் ஏரோஃப்ளாட் ஓபனில் பங்கேற்றார். 5/9 (+3–2 = 4) புள்ளிகள் பெற்று [7], தொண்ணூற்று இரண்டு போட்டியாளர்கள் பங்குபெற்ற இப்போட்டியில் இருபத்தி ஆறாவது இடத்தைப் பெற்றார் . [8]