அரவிந்த் சுப்பிரமணியன் | |
---|---|
அரவிந்த் சுப்பிரமணியன் | |
15வது இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 அக்டோபர் 2014 | |
முன்னையவர் | ரகுராம் கோவிந்தராஜன் |
பின்னவர் | கே. வி. சுப்பிரமணியன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | புனித இசுடீபன் கல்லூரி, தில்லி இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (முதுகலை மேலாண்மை) ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (எம். பில், டி. பில்) |
அரவிந்த் சுப்பிரமணியன் (Arvind Subramanian) தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளியலாளரும் முன்னாள் இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞரும் ஆவார். அக்டோபர் 16, 2014 முதல் சூன் 20, 2018 வரை இப்பொறுப்பில் இருந்தார்.[1]
சென்னையிலுள்ள டி.ஏ.வி. ஆண்கள் முதுநிலைப் பள்ளியில் அர்விந்த் பள்ளிப்படிப்பை முடித்தார். பொருளியல் பட்டப்படிப்பை தில்லியிலுள்ள செயின்ட் இசுடீபன் கல்லூரியிலும் முதுகலை வணிக மேலாண்மைப் படிப்பை ஆமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் தொடர்ந்தார்[2]. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள பீட்டர்சன் பன்னாட்டு பொருளியல் கழகத்தில் டென்னிசு வெதர்சுடோன் மூத்த ஆய்வாளராகவும் உலகளாவிய மேம்பாட்டு மையத்தில் மூத்த ஆய்வாளராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக அனைத்துலக நாணய நிதியத்தில் பொருளியலாளராகப் பணியாற்றியுள்ள அரவிந்த் இந்தியா, சீன மக்கள் குடியரசு, மற்றும் மாறிவரும் உலக பொருளாதாரச் செல்வாக்கு குறித்த வல்லுநராகக் கருதப்படுகிறார்.
ஆங்கிலத்தில் இந்தியாவின் முறை:பொருளியல் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் (India's Turn: Understanding the Economic Transformation) என்ற நூலை 2008இலும் ஒளிமறைப்பு: சீனாவின் பொருளியல் முதன்மையின் நிழலில் வாழ்வது (Eclipse: Living in the Shadow of China's Economic Dominance) என்ற நூலை செப்டம்பர் 2011இலும் எழுதியுள்ளார். மேலும் 2012இல் யார் மூலதனக் கணக்கை திறக்க வேண்டும் (Who Needs to Open the Capital Account?) என்ற நூலை இணைந்து பதிப்பித்துள்ளார்.
2011இல் ஃபாரின் பாலிசி இதழ் இவரை உலகின் முதல் 100 உலகளாவிய சிந்தனையாளர்களில் ஒருவராக மதிப்பிட்டுள்ளது.[3]
{{cite web}}
: |author=
has generic name (help)