அரவிந்த் பனகாரியா

அரவிந்த் பனகாரியா
கொலம்பியா பல்கலைக்கழகத்தில்
பொருளியல் பேராசிரியர் மற்றும் இந்திய அரசியல் பொருளாதாரத்திற்கான சகதீசு பாக்வதி பேராசிரியர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 30, 1952 (1952-09-30) (அகவை 72)
இந்தியா
முன்னாள் கல்லூரிஇராச்சசுத்தான் பல்கலைக்கழகம், இந்தியா
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
தொழில்பொருளியலாளர்

அரவிந்த் பனகாரியா (Arvind Panagariya) இந்திய அமெரிக்க பொருளியலாளரும் கொலம்பியா பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியரும் ஆவார்.[1][2][3] முன்னதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமைப் பொருளியலாளராகப் பணியாற்றியுள்ளார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகவும் பன்னாட்டுப் பொருளியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், உலக வணிக அமைப்பு, மற்றும் ஐக்கிய நாடுகள் வணிகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு (UNCTAD) ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பத்து நூல்களை எழுதியுள்ள பனகாரியாவின் தற்போதைய வெளியீடான இந்தியா: வெளிப்படும் மாமனிதன் என்ற நூல் இந்தியாவின் பொருளாதாரம் மீதான வரையறுப்பு நூல் என பரீத் சக்காரியா கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி வணிக நாளிதழான தி எகானமிக் டைம்சில் எழுதி வருகின்றார். கௌரவ ஆசிரியராக பைனான்சியல் டைம்சு, வால் இசுட்ரீட்டு சர்னல், இந்து, இந்தியா டுடே, அவுட்லுக் போன்ற இதழ்களில் எழுதி வருகின்றார். பல தேசியத் தொலைக்காட்சி மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சிகளில் தோன்றியுள்ளார்.

புளூம்பெர்கு இந்தியாத் தொலைக்காட்சியில் "அரவிந்த் பனகாரியாவுடன் இந்தியாவை மாற்றுவோம்" நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார்.[4]

பதவி விலகல்

[தொகு]

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியை மீண்டும் ஏற்கப் போவதாக அறிவித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் பதவியை 2017 ஆகத்து முதல் தேதியில் துறந்தார்.[5]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Arvind Panagariya: The revival of optimism
  2. Arvind Panagariya: Narendra Modi's real report card
  3. 5 things you should know about Arvind Panagariya
  4. "Transforming India With Arvind Panagriya". Archived from the original on 2015-01-03. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
  5. http://www.financialexpress.com/economy/arvind-panagariya-resigns-as-niti-aayog-vice-chairman-says-he-will-return-to-academia/789324/