அரிசரண் சிங் பிரார்

அரிசரண் சிங் பிரார்
13 ஆவது பஞ்சாப் முதல்வர்
பதவியில்
31 ஆகத்து 1995 – 21 நவம்பர் 1996
முன்னையவர்பியான்ட் சிங்
பின்னவர்இராஜிந்தர் கவுர் பட்டல்
தொகுதிமுக்ட்சர்
அரியானா ஆளுநர்
பதவியில்
1977–1979
முன்னையவர்ஜெய்சுக் லால் ஹத்தி
பின்னவர்சுர்ஜித் சிங் சண்டவாளியா = ஒடிசா ஆளுநர்
பதவியில்
1977–1977
முன்னையவர்சிவ நாராயிண் சங்கர்
பின்னவர்பி. டி. சர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-01-21)21 சனவரி 1919
இறப்பு6 செப்டம்பர் 2009(2009-09-06) (அகவை 90)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

அரிசரண் சிங் பிரார் (Harcharan Singh Brar, சனவரி 21, 1919 – செப்டம்பர் 6, 2009) பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரசு அரசியல்வாதி ஆவார். இவர் பஞ்சாபின் 13 ஆவது முதலமைச்சராக ஆகத்து 31, 1995 முதல் நவம்பர் 21, 1996 வரை பொறுப்பில் இருந்தார்.[1] கொலைசெய்யப்பட்ட முந்தைய முதலமைச்சர் பியான்ட் சிங்கை அடுத்து பதவியேற்றார்.[2]

தனி வாழ்க்கை

[தொகு]

பிரார் சனவரி 21, 1919 அன்று தேசிய நெடுஞ்சாலை 16 இல் முக்த்சர் சாகிபிற்கும் கோட் கபூராவிற்கும் இடையிலுள்ள சிற்றூர் சராய் நாகாவில் பிறந்தார்.இவரது தந்தை பல்வந்த் சிங் ஆகும். இலாகூரிலுள்ள அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[3] குர்பிந்தர் கவுர் பிராரை திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் கன்வர்ஜித் சிங் பிரார் என்ற மகனும் கன்வல்ஜித் கவுர் என்ற மகளும் உள்ளனர். இவர் தற்சமயம் முக்த்சர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பிரார் பஞ்சாப் விதான் சபாவிற்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்: 1960-62இல் முக்த்சரிலிருந்து, 1962-67 மற்றும் 1992–97 தேர்தல்களில் மீளவும், 1967-72 கிதர்பகாவிலிருந்து, 1969-74இல் கோட்கபூராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பெப்ரவரி 1977இலிருந்து செப்டம்பர் 1977 வரை ஒடிசாவின் ஆளுநராகவும் செப்டம்பர் 24, 1977 முதல் திசம்பர் 9, 1979 வரை அரியானா ஆளுநராகவும் பணியாற்றினார்.[3] சண்டிகரில் பஞ்சாப் & அரியானா தலைமைச்செயலகங்களுக்கு வெளியே தானுந்தில் குண்டு வீசப்பட்டு முதலமைச்சர் பியான்ட் சிங் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஆகத்து 31, 1995 இல் பஞ்சாபு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தமது ஆட்சிக்காலத்தில் பரீத்கோட் மாவட்டத்திலிருந்து பிரித்து முக்த்சர், மோகா மாவட்டங்களை புதியதாக உருவாக்கினார். இதைத் தவிர இவர் நீர்ப்பாசனம், ஆற்றல் துறை அமைச்சராகவும் உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இறப்பு

[தொகு]

நீண்டநாள் நோய்வாய்ப்பட்டிருந்த பிரார் செப்டம்பர் 6, 2009 இல் தமது சிற்றூரான சராய் நாகாவில், 90 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.[3]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Muktsar MLA Sunny Brar dead; cremation today". Hindustan Times. Archived from the original on 2013-09-12. பார்க்கப்பட்ட நாள் 2013-08-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. http://punjabassembly.nic.in/members/showcm.asp
  3. 3.0 3.1 3.2 Former Haryana governor Harcharan Singh Brar dead
  4. Mr. Brar cremated with full State Honour’s at his native village