அரிந்திரநாத் சட்டோபாத்யாயா | |
---|---|
![]() அரிந்திரநாத் சட்டோபாத்யாயா | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1957 | |
முன்னையவர் | முதல் தேர்தல் |
பின்னவர் | குமாரராசு அச்சமாம்பா |
தொகுதி | விஜயவாடா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியா | 2 ஏப்ரல் 1898
இறப்பு | 23 சூன் 1990 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 92)
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 2 |
உறவினர் | சரோஜினி நாயுடு (சகோதரி) |
அரிந்திரநாத் சட்டோபாத்தியாயா (Harindranath Chattopadhyay) (2 ஏப்ரல் 1898 – 23 ஜூன் 1990) இந்தியவைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞரும், நாடக கலைஞரும், நடிகரும், இசைக்கலைஞரும் மற்றும் விஜயவாடா மக்களவைத் தொகுதியிலிருந்து முதலாவது மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[1] இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரருமான சரோஜினி நாயுடு மற்றும் இந்தியாவில் ஆயுதப் புரட்சியை உருவாக்கி அதன் மூலமாக இந்திய விடுதலையைப் பெற விரும்பிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா ஆகியோரின் சகோதரர் ஆவார். இந்திய அரசு இவருக்கு 1973 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதை வழங்கியது [2] .
அரிந்திரநாத் ஓர் கவிஞரும் மற்றும் பாடகருமாவர். இவர் நூன் மற்றும் ஷேப்பர் ஷேப்ட் போன்ற கவிதைகளுக்கு பிரபலமானவர். இவரது தந்தை எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் ஐதராபாத் மாநிலத்தில் குடியேறி ஐதராபாத் கல்லூரியை நிறுவி நிர்வகித்தார். அது பின்னர் நிசாம் கல்லூரி என ஆனது. இவரது தாயாரும் ஒரு கவிஞர். அவர் வங்காள மொழியில் கவிதை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
தனது 19 வயதில் தி ஃபீஸ்ட் ஆஃப் யூத், என்ற முதல் கவிதை புத்தகத்தை வெளியிட்டார். இக் கவிதைக்காக ஆர்தர் குய்லர்-கோச் மற்றும் ஜேம்ஸ் ஹென்றி கசின்ஸ் ஆகியோரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார்.[3] அரிந்திரநாத் பொதுவாக பண்டைய இந்திய கலாச்சாரம் மற்றும் வேத கருத்துக்கள் தொடர்பான தலைப்புகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான கமலாதேவி சட்டோபாத்யாய் என்பவருடன் இவருக்கு முதல் திருமணம் இருந்தது. இவர்களுக்கு இராமன் என்ற ஒரு மகன் இருந்தார். பின்னர். இவர்கள் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். அந்நாளில் இது பெண்கள் பின்பற்றத் தயங்கும் மிகப் புதிதான ஒரு நடைமுறை. எனவே இதைக் குறித்தும் கமலா தேவி மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் சுந்தரி ராணி என்பவரை மணந்தார்.
அரிந்திரநாத் சட்டோபாத்யாயா அனைத்திந்திய வானொலியில்ரெயில் காடி என்ற கவிதையை அடிக்கடி வாசித்தார். அசோக் குமார் நடிப்பில் ஆசிர்வாத் என்ற படத்தில் இவர் பாடியிருந்தார். இவரே பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, சில பாடல்களைப் பாடியுள்ளார். ஜூலி திரைப்படத்தில், எந்த ஒரு இந்தித் திரைப்படத்திலும் இடம் பெறாத வகையில் முதல் ஆங்கிலப் பாடலை எழுதினார். இவர் இந்தியில் குழந்தைகளுக்காக பல கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் வங்காளக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரால் பாராட்டப்பட்டது.
1951இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரிந்திரநாத் சட்டோபாத்யாயா சென்னை மாநிலத்தின் விஜயவாடா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார். இவர் 14 ஏப்ரல் 1952 முதல் 4 ஏப்ரல் 1957 வரை முதலாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[4]
1972 இல் வெளியான பவார்ச்சி என்ற இந்தித் திரைப்படத்தில் இவர் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். இது தபன் சின்ஹா இயக்கிய வங்காளத் திரைப்படமான கல்போ ஹோலியோ சத்தியிலிருந்து இருசிகேசு முகர்ச்சியால் தழுவி எடுக்கப்பட்டது.
அரிந்திரநாத் 1984 ஆம் ஆண்டு மும்பை தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடரான அடோஸ் படோஸ் என்ற தொடரிலும் நடித்தார். இதில் அமோல் பலேகர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அரிந்திரநாத் கடந்த 1990 ஜூன் 23ஆம் தேதி மாரடைப்பால் மும்பையில் மரணமடைந்தார்.[5]
{{cite book}}
: |last=
has generic name (help); Unknown parameter |coauthors=
ignored (help)