அரியான்வி திரைப்படத்துறை (Haryanvi cinema) என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அரியான்வி மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்திய மாநிலமான அரியானா மாநிலத்தில் அரியான்வி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
1984 இல் வெளியான 'சந்திரவால்'[1][2] என்ற திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற முதல் அரியான்வி மொழித் திரைப்படம் ஆகும்.[3] 2000 ஆம் ஆண்டில் 'அஸ்வினி சவுத்ரி' இயக்கத்தில், நடிகர் 'அசுதோஷ் ராணா' நடித்து வெளியான 'லாடோ' என்ற திரைப்படம் மற்றொரு வெற்றிகரமான அரியான்வி திரைப்படம் ஆகும். இது தேசிய திரைப்பட விருதில் புதுமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதை வென்றுள்ளது.[4] இதுவே தேசிய விருது பெற்ற முதல் அரியான்வி மொழியித் திரைபபடம் ஆகும்.[5]
2014 இல் வெளியான 'பக்டி த ஹொனோர்' என்ற திரைப்படம் 62 வது தேசிய திரைப்பட விருது விழாவில் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளது. அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் 'சத்ரங்கி' என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான 63 வது தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளது.
{{cite web}}
: |last=
has generic name (help)