அருணகிரிநாதர் (1964 திரைப்படம்)

அருணகிரிநாதர், 1964
சுவரொட்டி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புபாபா ஆர்ட் புரெடக்சன்ஸ் பி. எஸ். மூர்த்தி
இசைஜி. ராமநாதன் & டி. ஆர். பாப்பா
நடிப்புடி. எம். சௌந்தரராஜன்
சாரதா
பி. எஸ். சரோஜா
ஒளிப்பதிவுஜி. கே. ராமு
படத்தொகுப்புடி. கே. சங்கர்
வெளியீடு1964
ஓட்டம்2.25
நாடு இந்தியா
மொழிதமிழ்

அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இத்திரைபடத்தை பாபா ஆர்ட் புரெடக்சன்ஸ் நிறுவனம், 1964ல் தயாரித்து வெளியிட்டது. டி. ஆர். ராமண்ணா இயக்கிய இத்திரைப்படத்தின் நாயகனான டி. எம். சௌந்தரராஜன், சாரதா ஆகியோர் அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் சக்தி கிருஷ்ணசாமி எழுதிய ஏழு பாடல்களை டி. எம். சௌந்தரராஜன் பாடியுள்ளார். அதில் சில பாடல்களை பி. சுசீலா மற்றும் ஜிக்கியுடன் பாடியுள்ளார்.[1]

இப்படத்தின் எதிர் நாயகனாக எம். ஆர். இராதா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி. ராமநாதன் மற்றும் டி. ஆர். பாப்பா இசை அமைத்துள்ளனர். திரைப்படத்தின் தயாரிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜி. ராமநாதனும் உடல் நிலை சரியில்லாததலால் டி. ஆர். பாப்பா அவர்கள் மீதி பாடல்களுக்கு இசையமைத்தார்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அருணகிரிநாதர் தமிழ் திரைப்படம்
  2. Charulatha Mani (2 September 2011). "A Raga's Journey – Sacred Shanmukhapriya". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141009133403/http://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-sacred-shanmukhapriya/article2418290.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]