வகைகுறி சின்னம் | |
Product type | பனிக்கூழ் |
---|---|
Owner | ஹட்சன் அக்ரோ நிறுவனம் |
Country | இந்தியா |
Introduced | 1971 |
Website |
அருண் ஐஸ்கிரீம்ஸ் (Arun Icecreams) என்பது தமிழ்நாட்டின் ஹாட்சன் அக்ரோ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்திய பனிக்கூழ் வகைக்குறி ஆகும். [1] [2] [3]
அருண் ஐஸ்கிரீம்ஸ் நிறுவனம் 1970 இல் ஆர். ஜி. சந்திரமோகனால் தொடங்கப்பட்டது. இது மூன்று ஊழியர்களுடனும், 15 தள்ளுவண்டிகளுடன் சென்னை இராயபுரத்தில் வணிகத்தை துவக்கபட்டது.[4] இது 1985 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் பனிக்கூழ் விற்பனை வகைகுறிகளில் முதலிடம் பிடித்தது.
1999 வாக்கில், தமிழ்நாடு, கருநாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 700 விற்பனை நிலையங்கள் இருந்தன, மேலும் 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி 2,300 பார்லர்கள் இருந்தன, மேலும் இந்த வகைக்குறி மகாராட்டிரம் மற்றும் ஒரிசா வரை நீட்டிக்கப்பட்டது. [1] [5]