அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra | |
---|---|
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
குடியரசுத் தலைவர் | அனுர குமார திசாநாயக்க |
பிரதமர் | அரிணி அமரசூரியா |
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பெரும்பான்மை | 38,368 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 19, 1991 திருகோணமலை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி |
வாழிடம் | திருகோணமலை |
அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra, 19 சூலை 1991)[1] ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4] அருண் ஹேமச்சந்திரா 2024 நவம்பர் 21 இல், அனுர குமார திசாநாயக்கவின் அரசில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இவர் உள்ளார். மேலதிகமாக இவர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராகவும் 2024 நவம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.[5]
திருகோணமலையில் பிறந்த அருண் ஹேமச்சந்திரா திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, கண்டி திரித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2024 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | மக்கள் விடுதலை முன்னணி | தேசிய மக்கள் சக்தி | 38,368 | தெரிவு[6] |