அருள் சங்கர் (Arul Shankar) என்பவர் ஓர் இந்திய கணிதவியலாளர் ஆவார். டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் இவர் கணிதவியலாளராக, எண் கோட்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவராகப் பணிபுரிந்தார். மேலும் குறிப்பாகச் சொல்வதென்றால் கணித புள்ளிவிவரங்கள் துறையில் அருள் சங்கர் நிபுணர் என்று கூறலாம்[1]. தன்னுடைய முனைவர் பட்டத்தை இவர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் மஞ்சுள் பார்கவாவின் தலைமையின் கீழ் படித்து பெற்றார். ஒரு நீள்வட்ட வளைவின் தரச் சராசரியை பார்கவாவுடன் சேர்ந்து உருவாக்கியதற்காக இவர் அறியப்படுகிறார்[2].
2018 ஆம் ஆண்டில் இவருக்கு சுலோவன் ஆராய்ச்சி உறுப்பினர் என்ற விருது வழங்கப்பட்டது[3] கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.[4]