அருவி | |
---|---|
First look poster | |
இயக்கம் | அருண் பிரபு புருசோத்தமன் |
தயாரிப்பு | எஸ். ஆர். பிரபு எஸ். ஆர். பிரகாஷ்பாபு |
கதை | அருண் பிரபு புருசோத்தமன் |
இசை | பிந்து மாலினி வேதாந்த் பரத்வாஜ் |
நடிப்பு | அதிதி பாலன் |
ஒளிப்பதிவு | ஷெல்லி காலிஸ்ட் |
படத்தொகுப்பு | ரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டா |
கலையகம் | டிரீம் வாரியர் பிக்சர்ஸ் |
விநியோகம் | டிரீம் வாரியர் பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 15, 2017 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அருவி (ⓘ) ஓர் இந்திய தமிழ்த் திரைப்படம். இது 2017ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள சமூக-அரசியல் கதைக்களமுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன். இத்திரைப்படம் இவரின் அறிமுகத் திரைப்படம். இத்திரைப்படம் அருவி (அதிதி பாலன்) என்ற பெண் பாத்திரப்படைப்பின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளைச் சித்தரிக்கும் திரைப்படம் ஆகும். இந்தப் பாத்திரப் படைப்பானது, நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்பிலிருந்து வெளிப்பட விழைகின்ற ஒரு புரட்சிகரமான இளம்பெண்ணைச் சித்தரிப்பதுடன், சமகாலத்திய இருத்தலியலின் நெருக்கடி நிலையின் பொருளை விளங்கிக் கொள்ளும் முயற்சியையும் மேற்கொள்கிறது. இத்திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் உலகளாவிய அளவில் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 15 ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம், நடிப்பு, நடிகர் தேர்வு மற்றும் இயக்கம் ஆகியவை தொடர்பான திறனாய்வு ரீதியான பரந்து பட்ட ஆர்ப்பரிப்பைப் பெற்றுள்ளது.
ஒரு கண்ணியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண், பொருளாதார-சமூக-நுகர்வியல் சூழலில் சமூகத்தில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் சிரமத்தை உணர்கிறாள். கதையின் நாயகி, இதற்குக் காரணமாக இருக்கும் சமூகத்திற்கெதிராக கடுமையாக எதிர்வினையாற்ற முடிவெடுக்கிறாள். அவள் எத்தகைய எதிர்வினையாற்றினாள் என்பதை திரைக்கதையின் மீதம் சொல்கிறது. அருவி திரைப்படம் ஒரு பெண் சமூகத்தால் பெறும் கடும் வேதனையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.[1][2]