அரேனி -1 வைன் ஆலை என்பது 6100 ஆண்டுகள் பழமையான வைன் ஆலை ஆகும், இது 2007 ஆம் ஆண்டில் ஆர்மீனியாவின் வயோட்ஸ் டிஜோர் மாகாணத்தில் உள்ள அரேனி கிராமத்தில் உள்ள அரேனி அரேனி -1 குகை வளாகத்தில் ஆர்மீனிய மற்றும் ஐரிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாய்வானது ஆர்மீனிய தேசிய அறிவியல் அகாடமியின் தொல்பொருள் மற்றும் இனவியல் நிறுவனத்தின் போரிஸ் காஸ்பரியன் மற்றும் பல்கலைக்கழக கல்லூரி கார்க் (அயர்லாந்து) ஐச் சேர்ந்த ரான் பின்ஹாசி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுக்கு கோஃபெல்லர் அறக்கட்டளை (அமெரிக்கா) மற்றும் பல்கலைக்கழக கல்லூரி கார்க் ஆகியோரால் நிதியுதவி வழங்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் (யு.சி.எல்.ஏ) கிரெனோரி அரேஷியனுடன் அரேனி திட்டத்தின் இணை இயக்குநராக இணைந்தது. அப்போதிருந்து அகழ்வாராய்ச்சிகளுக்கு யு.சி.எல்.ஏ மற்றும் தேசிய புவியியல் கழகம் நிதியுதவி அளித்துள்ளன. ஒயின் ஆலை அகழாய்வு 2010 இல் நிறைவடைந்தது.
குகையில் ஒயின் தயாரிக்கும் விதத்தில் திராட்சை ரசத்தை நொதிக்கவைக்க வரிசையாக பல மண் குடுவைகள் புதைக்கப்பட்டிருந்தன. அந்த குடுவைகளில் திராட்சையில் உள்ள டார்டாரிக் அமிலம் படிந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் 1963 ஆம் ஆண்டில் யூடியா மற்றும் சமாரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒயின் ஆலைகளை விட இது குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.[1][2][3]
2008 ஆம் ஆண்டில் அதே குகையில் அரேனி -1 ஷூ கண்டுபிடிக்கப்பட்டது.
அரேனி -1 குகையில் அகழ்வாராய்ச்சிகள் 2007 இல் தொடங்கி 2010 செப்டம்பர் வரை தொடர்ந்தது. ஆர்மீனிய, அமெரிக்க மற்றும் ஐரிஷ் தொல்லியல் ஆய்வாளர்ககள் பெரிய, நன்கு பாதுகாக்கப்பட்ட 2-அடி (60 சென்டிமீட்டர்) ஆழமான பெருந்தொட்டி மற்றும் 3.5 அடி (ஒரு மீட்டர்) அளவு நீண்ட களிமண்ணால் செய்யப்பட்ட அகன்ற பாத்திரம் இதை மால்விடினைக் கொண்டு மூடப்பட்டிருந்தது.[3] இந்த கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் திராட்சை விதைகள், அழுத்திய திராட்சைகளின் எச்சங்கள், கொடிமுந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் வறண்ட கொடிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைய இன்தேறல் பாண்டங்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான குடி கோப்பைகளும் அகழப்பட்டன. இவை இறுதி சடங்குகள் போன்ற சடங்கு நடைமுறைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.[4][5] குகையானது பின்னர் கைவிடப்பட்டுள்ளது. குளையில் புதைக்கப்பட்டிருந்த கரிமப் பொருட்கள் அங்கு பூசப்பட்டிருந்த செம்மறி சாணத்தினால் பாதுகாக்கப்பட்டது. செம்மறி சாணமானது இந்த எச்சங்களையும் புதைப் பொருட்களையும் பூஞ்சைகளிடமிருந்து காத்துள்ளது.[1]
இந்த அணியின் முழு கண்டுபிடிப்புகளும் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.