அறநெறி காவலர் (Moral police) என்பது இந்தியாவில் ஒழுக்க நெறிமுறைகளை அமல்படுத்த செயல்படும் விழிப்புணர்வு குழுக்களைக் குறிப்பதாகும்.[1][2] இந்தியாவின் சில சட்டங்கள், மற்றும் இந்தியாவில் உள்ள காவல் துறை படைகளின் சில நடவடிக்கைகள் அறநெறி காவல்துறையின் பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகிறது.[3] அறநெறி காவல்துறையின் இலக்கு விழிப்புணர்வு குழுக்களை ஏற்படுத்துதல், அரசாங்கம் அல்லது காவல்துறை "ஒழுக்கக்கேடானது" அல்லது " இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான" என்று கருதும் எந்த நடவடிக்கையும் சீர் செய்வதனை முதன்மையாகக் கொண்டு செயல்படுவது ஆகும்.[4][5]
இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் பல விழிப்புணர்வு குழுக்களை இந்தியா கொண்டுள்ளது. அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பரவியதாக கருதும் கலாச்சாரக் கருத்துக்களை எதிர்க்கிறார்கள்.[6] அவர்கள் மதுக்கடைகள் மற்றும் மது விடுதிகளைத் தாக்கினர்.[7] இந்த குழுக்களில் சிலர் கலை கண்காட்சிகளையும் தாக்கியுள்ளனர் அல்லது மூட வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தினர், அங்கு அவர்கள் ஆபாச ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.[8][9] ஊடகங்களின் சில உறுப்பினர்களும் இத்தகைய குழுக்களுடன் இணைந்துள்ளனர்.[7] சில அரசியல்வாதிகள் இத்தகைய கண்ணோட்டங்களையும் அவ்வப்போது இத்தகைய நடவடிக்கைகளையும் ஆதரித்துள்ளனர்.[6]
இந்தியாவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 292 முதல் 294 வரையிலான பிரிவுகள் ஆபாசத்தைக் கையாளுகின்றன. இந்த சட்டங்களில் பெரும்பாலானவை 1860 க்கு முந்தையவை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292, ஆபாச புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகம் பற்றியது. இது புத்தகங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்வதனை குற்றவாளியாக்குகிறது.[10]
பிரிவு 293 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்வது பற்றி விவரிக்கிறது.[10]
ஒழுக்கக்கேடு போக்குவரத்து (தடுப்பு) சட்டம், 1956 மனித கடத்தலை தடுக்க முதலில் இயற்றப்பட்டது.[11] பாலியல் மோசடி நடத்தப்படுவதாக சந்தேகித்தால் உணவகங்களில் சோதனை நடத்த காவல்துறையினை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.[12] இந்த சட்டத்தை பயன்படுத்தி உணவகங்களில் சோதனை நடத்தவும், தேவை ஏற்படின் தம்பதிகளை கைது செய்யவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.[13]
இந்தியாவின் ஆபாச சட்டங்கள் ஹிக்லின் சோதனையுடன் அடிக்கடி ஒப்பிடப்படுகின்றன.[14][15][16]
காதலர் தினம் பெரும்பாலும் சிவசேனா மற்றும் அறநெறி காவலர்கள் போன்ற குழுக்களால் மேற்கத்திய நடைமுறைகளால் எதிர்ப்புக்கு ஆளாகிறது.[17] விழிப்புணர்வுக் குழு இந்த நிகழ்வுக்கு முன்பாக பரிசு மற்றும் அட்டை கடைகளைத் தாக்குகிறார்கள்.[18] தம்பதிகள் கைகளைப் பிடிப்பதற்காகவும் அல்லது பொது இடத்தில் முத்தமிடுவதற்காகவும் தாக்கப்படுகிறார்கள்.[17]
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேஇது இந்திய கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் மேற்கின தாக்குதல் என்றும், அது வணிகரீதியான லாபத்திற்காக இளைஞர்களை ஈர்க்கிறது என்றும் கூறினார். சிவசேனா தலைவர் பால் தாக்கரே, வன்முறையை விரும்பாத மக்கள் அதை கொண்டாடக்கூடாது என்று கூறினார்.[19] அவர் இந்த விழாவை வெட்கமற்றதாகவும் இந்திய கலாச்சாரத்திற்கு முரணானதாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.[20] எப்போதாவது, காவல்துறையும் இந்த குழுக்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது, ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் தற்போது அவரை அதிகரித்து வருகிறது.[21]