அறிவியல் புனைகதை அறக்கட்டளை

Science Fiction Foundation
நிறுவப்பட்டது1970
தலைமையகம்ஐக்கிய இராச்சியம்

அறிவியல் புனைகதை அறக்கட்டளை (Science Fiction Foundation) என்பது 1970 இல் இங்கிலாந்தில் ஜார்ஜ் ஹே மற்றும் பிறர் நிறுவப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை ஆகும். இந்த அமைப்பின் நோக்கம் அறிவியல் புனைவுகளை ஊக்குவிப்பதும், பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதிலும் அறிவியல் புதின எழுத்தாளர்களின் வாசகர்கள், நடிகர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைப்பதாகும். புதின எழுத்தாளர்களான ஆர்தர் சி. கிளார்க் மற்றும் அர்சலா கே. லா குவின் ஆகியோர் தொடக்கநிலப் புரவலராகவும் நீல் கெய்மென் மற்றும் பேராசிரியர் டேவிட் செளத் வுட் ஆகியோர் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளனர்.[1] 1995 ஆண்டில் இந்த அறக்கட்டளை தற்போதைய வடகிழக்கு லண்டன் பாலிடெக்னிக் (Barking, Essex, UK) (தற்போது கிழக்கு லண்டன் பல்கலைக்கழகம்) இல் நிறுவப்பட்டது. இக்காலத்தில் இவ்வமைப்பின் இயக்குனராக செயல்பட்டவர் மால்கோம் எட்வர்ஸ் ஆவார். இவர் பிற்காலத்தில் கோலங்ஸ் மற்றும் ஓரியானுக்கு மாறுதல் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. An Introduction to the Science Fiction Foundation (2010-12-31). SFF. Confirmed 2011-07-23.