உருவாக்கம் | 1980 |
---|---|
நிறுவனர் | அனில் அகர்வால் |
வகை | பொது பயன்பாட்டு ஆய்வு |
தலைமையகம் |
|
சேவைப் பகுதி | இந்தியா |
முக்கிய நபர்கள் | சுனிதா நரேன்[1] |
வலைத்தளம் | www |
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) என்பது இந்தியாவில் புது தில்லியை மையமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற பொதுநல ஆராய்ச்சி மற்றும் ஆலோசக அமைப்பாகும். 1980-ல் நிறுவப்பட்டது, இந்த அமைப்பு இந்தியாவில் சுற்றுச்சூழல்-மேம்பாடு பிரச்சினைகள், மோசமான திட்டமிடல், இந்தியாவின் சுந்தரவனத்தை அழிக்கும் காலநிலை மாற்றங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் கொள்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கும் சிந்தனைக் குழுவாகச் செயல்படுகிறது.
இந்த மையத்தின் இயக்குநர் சுனிதா நரேன் ஆவார். இவரது தலைமையின் கீழ், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் அமெரிக்கத் தயாரிப்பான கோக் மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அம்பலப்படுத்தியது.[2]
2018-ல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு பெற்றது . [3]
இதன் திட்டங்களில் உணவு கலப்படம்[4] மற்றும் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.[5]