அலன் மெல்வில்

அலன் மெல்வில்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 11 190
ஓட்டங்கள் 894 10598
மட்டையாட்ட சராசரி 52.58 37.85
100கள்/50கள் 4/3 25/53
அதியுயர் ஓட்டம் 189 189
வீசிய பந்துகள் - 6927
வீழ்த்தல்கள் - 132
பந்துவீச்சு சராசரி - 29.99
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/- 156/-

அலன் மெல்வில் (Alan Melville, பிறப்பு: மே 19 1910, இறப்பு: ஏப்ரல் 18 1983), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 190 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1949 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மெல்வில் ஒரு வலது கை நடுத்தர வரிசை மட்டையாளர் ஆவார். இவர் சில நேரங்களில் ஒரு தொடக்க வீரராகவும் வலது கை மற்றும் கூகிள் பந்து வீச்சாளராகவும் பயன்படுத்தப்பட்டார். மைக்கேல்ஹவுஸில் படித்த இவர், 1928-29ல் பள்ளி மாணவராக இருந்த போது நடால் துடுப்பாட்ட அணிக்காக முதன்முதலில் விளையாடினார். [1] தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 71 ஓட்டங்களுக்கு இவர் இழப்புகளை வீழ்த்தினார். [2] 1929 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கான தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இவரது இரண்டாவது போட்டியில் இவர் 123 ஓட்டங்கள் எடுத்தார், ஜாக் சீடலுடன் இரண்டாவது இணைக்கு 283 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் பந்துவீச்சில் இவர் நான்கு இழப்புகளையும் வீழ்த்தினார். [3] இவரது துடுப்பாட்டத் திறனுக்காக இவர் சுற்றுப் பயண அணியில் தேர்வாக வாய்ப்பிருந்தது. ஆனால் 1929 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் செல்லு வேண்டி இருப்பதனை நோக்கமாகக் கொண்டு இவர் தனது படிப்பைத் தொடருவார் என்று இவரது தந்தை முடிவு செய்தார் [1]இவர் ஆக்ஸ்போர்டுக்குச் செல்வதற்கு முன்பு, மெல்வில் ஒரு கார் விபத்தில் சிக்கினார், அதில் இவரது மூன்று முதுகெலும்புகள் உடைந்தது. இவர் முழுவதும் குணமடைந்த பின்னர் 1929 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் சேர்ந்தார். [1]

உள்ளூர் போட்டிகள்

[தொகு]

ஆக்ஸ்போர்டில் நடந்த பயிற்சிப் போட்டியில் மெல்வில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நூறு ஓட்டத்தினை அடித்தார், அதன் பின்னர் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தரப்பில் ஒரு நிரந்தர வீரராக இருந்தார், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக துடுப்பாட்டத் திறனை இவர் வெளிப்படுத்தியதால் நீலத்தை வென்றார்.

1930 , மே மாதத்தில் கெண்ட் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் ஆக்ஸ்போர்டு துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடிய தனது முதல், முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் 78 ஓட்டங்கள் எடுத்தார். [4] அடுத்த ஆட்டத்தில், யார்க்ஷயர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 118 ஓட்டங்கள் எடுத்தார். [5] ஆனால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எதிரான துடுப்பாட்டப் போட்டியில் பல்கலைக்கழக துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடிய இவர் மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டில்ம் இவர் சிறப்பாக விளையாடத் தவறினார்.என்றாலும், 32.83 சராசரியோடு 591 ரன்கள், மற்றும் 19 இழப்புகளை எடுத்தார். [6] 1931 ஆம் ஆண்டில் மெல்வில் 631 ஓட்டங்களை 35.05 எனும் சராசரியில் எடுத்தார். ஆனால் ஒரு நூறு ஓட்டங்கள் எடுக்காமல் இருந்தார். பல்கலைக்கழக அணியின் நியமிக்கப்பட்ட தலைவரான டெனிஸ் மூருக்கு ஏற்பட்ட காயம், காரணமாக பல்கலைக்கழக போட்டியில் மெல்வில் தலைமைப் பொறுப்பினை வகித்தார்.

அங்கு இப்திகார் அலி கான் பட்டோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 238 ஓட்டங்கள் எடுத்தார் , இது ஆலன் ராட்க்ளிஃப் கேம்பிரிட்ஜ் துடுப்பாட்ட அணிக்கு எதிராக எடுத்த 201 ஓட்டங்கள் எனும் சாதனையினை முறியடித்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆக்ஸ்போர்டு துடுப்பாட்ட அணி 1923 ஆம் ஆண்டிற்குப் பிற்கு கேம்பிரிட்ஜுக்கு எதிரான முதல் வெற்றியைப் பெற்றது . [7] 1932 ஆம் ஆண்டில், மெல்வில் ஆக்ஸ்போர்டு துடுப்பாட்ட அணியின் தலைவரக இருந்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Wisden Cricketers of the Year: Alan Melville". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 April 2013.
  2. "Scorecard: Natal v Transvaal". www.cricketarchive.com. 15 December 1928. பார்க்கப்பட்ட நாள் 1 April 2013.
  3. "Scorecard: Natal v Border". www.cricketarchive.com. 19 December 1928. பார்க்கப்பட்ட நாள் 1 April 2013.
  4. "Scorecard: Oxford University v Kent". www.cricketarchive.com. 3 May 1930. பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.
  5. "Scorecard: Oxford University v Yorkshire". www.cricketarchive.com. 7 May 1930. பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.
  6. "Scorecard: Oxford University v Cambridge University". www.cricketarchive.com. 7 July 1930. பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.
  7. "Scorecard: Oxford University v Cambridge University". www.cricketarchive.com. 6 July 1931. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.