அலபாமா அரசுப் பல்கலைக்கழகம்

அலபாமா அரசுப் பல்கலைக்கழகம்
Alabama State University
குறிக்கோளுரைவாய்ப்பு இங்கே உள்ளது.
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Opportunity is Here."
வகைபொது
உருவாக்கம்1867
நிதிக் கொடை78 மில்லியன்
மாணவர்கள்12,000
பட்ட மாணவர்கள்7,800
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,400
400
பிற மாணவர்
400
அமைவிடம்,
ஐக்கிய அமெரிக்கா, அலபாமா
வளாகம்நகர்ப்புற வளாகம், 172 ஏக்கர்கள்[1]
நிறங்கள்கருப்பு, தங்க நிறம்
         
விளையாட்டுகள்கால்பந்து
பேஸ்பால்
கூடைப்பந்து
கோல்ஃப்
டென்னிஸ்
தடகளம்
பூப்பந்து
கைப்பந்து
சுருக்கப் பெயர்ஹார்னெட்ஸ், லேடி ஹார்னெட்ஸ்
இணையதளம்www.alasu.edu

அலபாமா அரசுப் பல்கலைக்கழகம் (Alabama State University) என்பது அமெரிக்காவிலுள்ள அலபாமா மாநிலத்தின் மான்ட்கமரி நகரில் உள்ள ஒரு பொது வரலாற்று கறுப்பின பல்கலைக்கழகம் ஆகும். 1867 இல் நிறுவப்பட்டது. புனரமைப்பு காலத்தில், இது 19 ஆம் நூற்றாண்டில் மாநில அரசாங்கங்களால் வேகமாக வளர்ந்து வரும் பொதுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக நிறுவப்பட்ட சுமார் 180 "சாதாரண பள்ளிகளில்" ஒன்றாக இருந்தது. பிரிக்கப்பட்ட பள்ளிகளில் கற்பிக்க ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப் பயிற்றுவிப்பதற்காக நிறுவப்பட்ட 23 நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 180 பள்ளிகளில் சில மூடப்பட்டன. ஆனால் மிகவும் சீராக தங்கள் பங்கை விரிவுபடுத்தி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாநிலக் கல்லூரிகளாகவும், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாநிலப் பல்கலைக்கழகங்களாகவும் மாறியது.[2]

கல்வி

[தொகு]

இங்கு ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

  • வணிக நிர்வாகக் கல்லூரி
  • கல்விக் கல்லூரி
  • உடல் நலக் கல்விக் கல்லூரி
  • கலைக் கல்லூரி
  • அறிவியல், தொழில் நுட்பம், கணிதக் கல்லூரி
  • கவின்கலைக் கல்லூரி
  • வானியல் கல்லூரி
  • தொடர்கல்விக் கல்லூரி

வளாகம்

[தொகு]
வில்லியம் பர்ன்ஸ் பேட்டர்சன் அறை

இது 172 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 267,000 நூல்களைக் கொண்ட நூலகம் உள்ளது. மாணவர்களுக்கான வகுப்பறைகளும், அலுவலங்களும், மருத்துவக் கூடமும் அமைந்துள்ளன. பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வானொலி வசதியும் உள்ளது.

மாணவர்கள்

[தொகு]

இந்த பல்கலைகழகத்தில் 40க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் உள்ளனர். ஏறக்குறைய 40% மாணவர் அமைப்பினர் அலபாமாவுக்கு வெளியில் இருந்து வருகிறார்கள்.[3] மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கருத்துக்கேற்ப குழுக்களை அமைத்துக் கொள்கின்றனர். சமுதாயம், சமயம், இசை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுக்கள் உண்டு. மாணவர்களே இணைந்து நாளேடுகளையும் வெளியிடுகின்றனர். தி ஹார்னெட் டிரிபியூன், தி ஹார்னெட் ஆகியன குறிப்பிடத்தக்கன.[4][5]

விளையாட்டு

[தொகு]

இங்கு ஆண்களுக்கான கால்பந்து, பேஸ்பால், கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றனர். பெண்களுக்காக கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து, கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியளிக்கின்றனர். இந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க

[தொகு]
  • Bond, Horace Mann (1969) [1939]. Negro Education in Alabama A Study in Cotton and Steel. New York: Octagon Books.
  • Caver, Joseph (1982). A Twenty-Year History of Alabama State University, 1867–1887." Master's thesis. Alabama State University.
  • Knight v. Alabama, 933 F.2D. 1991.
  • United States v. Alabama, 828 F.2D 1532. 11th Cir. 1987.
  • Watkins, Levi (1987). Fighting Hard: The Alabama State University Experience. Detroit, Mich.: Harlo Press.
  • Karl E. Westhauser; Elaine M. Smith; Jennifer A. Fremlin, eds. (2005). Creating Community: Life and Learning at Montgomery's Black University. Tuscaloosa: University of Alabama Press.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alabama State University". The Encyclopedia of Alabama. (July 28, 2008). 
  2. Christine Ogren, The American State Normal School: 'An Instrument of Great Good' (Palgrave Macmillan, 2005) pp. 1-5, 213-235; online.
  3. "Enrollment Maps | Alabama State University".
  4. "The Hornet Tribune". Thehornettribuneonline.com. Retrieved February 22, 2022.
  5. "Student Life | Alabama State University". Alasu.edu. Retrieved 2022-02-16.

வெளி இணைப்புகள்

[தொகு]

32°21′50″N 86°17′42″W / 32.364°N 86.295°W / 32.364; -86.295