அலமட்டி அணை ಆಲಮಟ್ಟಿ ಅಣೆಕಟ್ಟು Almatti dam | |
---|---|
அலமட்டி அணையும் இடதுபுற மின் நிலையமும் | |
அதிகாரபூர்வ பெயர் | மேல் கிருட்டிணா-I (அலமட்டி) |
அமைவிடம் | கருநாடகம்,பீசப்பூர் மாவட்டம், பசவண பாகேவாடி |
புவியியல் ஆள்கூற்று | 16°19′52″N 75°53′17″E / 16.331°N 75.888°E |
திறந்தது | 2005 சூலை |
கட்ட ஆன செலவு | Rs. 5.20 பில்லியன்கள் |
இயக்குனர்(கள்) | கருநாடக மின் கழக லிமிடெட் |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | கிருட்டிணா ஆறு |
உயரம் | 524.26அடி |
நீளம் | 1565.15 அடி |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 123.08 Tmcft at 519 m MSL |
நீர்ப்பிடிப்பு பகுதி | 33,375 sq. கிமீ |
மேற்பரப்பு பகுதி | 24,230 hectares |
Minimum Draw Down Level : 504.75 m MSL |
அலமட்டி அணை (Almatti Dam) என்பது வட கருநாடகத்தில், கிருட்டிணா ஆற்றின் குறுக்கே கொண்டுவரப்பட்ட ஒரு நீர்மின் திட்டம் ஆகும். இத்திட்டப் பணிகள் 2005 சூலையில் முடிவடைந்தது. அணையின் இலக்கு வருடத்திற்கு 560 MU மின்சார உற்பத்தியாகும்.[1]
இந்த அணை மேல் கிருட்டிணா நீர்ப்பாசன திட்டத்தின் பிரதான நீர்தேக்கம் ஆகும்; 290 மெகாவாட் மின் நிலையம் அல்மட்டி அணையின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த வசதி செங்குத்து கப்லான் விசையாழிகளை பயன்படுத்துகிறது: ஐந்து 55மெகாவாட் மின்னாக்கிகள் மற்றும் ஒரு 15மெகாவாட் மின்னாக்கி ஆகியவை மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மின் உற்பத்திக்குப் பிறகு செல்லும் நீரானது நாராயண்புர் நீர்ப்பாசன திட்டத்துக்கு தேவைப்படும் நீர்த்தேவைக்கு வழங்கப்படுகிறது.
திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், திட்டத்துக்கு மதிப்பிடப்பட்ட செலவுகள் ரூ .14.70 பில்லியனாக நிருணயிக்கப்பட்டது. ஆனால் கருநாடக மின் கழக லிமிடெட் (கேபிசிஎல்) திட்டத்தை மாற்றுவதற்றியமைத்தப் பிறகு, மதிப்பீட்டுச் செலவு 6.74 பில்லியனாக குறைந்து ஐம்பது சதவீதம் குறைக்கப்பட்டது. கே.பி.சி.சி திட்டம் ரூ. 5.20 பில்லியன் அளவில் முடிவடைந்தது .[சான்று தேவை] முழு அணையும் நாற்பது மாதங்களுக்கு குறைவான காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு, சூலை 2005 ல் கட்டுமான பணிகள் அணைத்தும் முடிவடைந்தது. அணை பிசாப்பூர் மற்றும் பாகல்கோட் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. அணையானது பிசப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, என்றாலும் அணையின் நீர் தேங்கும் பகுதியக்ககாக பாகல்கோட் மாவட்டத்தின் பரந்த நிலப்பரப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அணையின் மொத்த நீர் சேமிப்பு சேமிப்பு 123.08 TMC 519 மீட்டர் MSL ஆகும்.[2]
அல்மட்டி அணையின் நீர்தேங்கும் உயரமானது 519 மீட்டர் எம்எல்.எல் ஐ தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் முதலில் தடை விதித்தது. ஆந்திரா, கருநாடகா மற்றும் மகாராட்டிராவுக்கு இடையிலான கிருட்டிணா நதி மோதலை பிரசேசு குமார் நடுவர் மன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்ட பிறகு அணையானது கிட்டத்தட்ட 200 டி.எம்.சி மொத்த சேமிப்பு திறன் கொண்டதாகவும், 524 மீட்டர் MSL உயரத்துக்கு நீர்தேக்கப்படக்கூடியதாகவும் உள்ளது.
ஏழு மாடி தோட்டங்கள் அணை பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. படகு, இசை நீரூற்றுகள், நீரூற்றுகள் போன்றவை அணைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. அணையின் ஒரு பகுதியில், "ராக் ஹில்" என்ற பெயரில் செயற்கையான தோட்டத்தில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் மற்றும் இந்தியாவில் கிராம வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பல சிலைகள் அமைந்துள்ளது.
அல்மட்டி விசய்பூரிலிருந்து 66 கி.மீ. தொலைவில் உள்ளது மற்றும் ரயில் மூலம் சுமார் 1 மணி நேரம், 10 நிமிடங்கள் ஆகும்.[3]