அலி சினா (Ali Sina) என்பவர் ஒரு ஈரானிய முன்னாள் முஸ்லீம். இஸ்லாமை வலுவாக விமர்சிக்கும் ஒரு விமர்சகராக செயல்படுகிறார். முன்னாள் முஸ்லீம்களுக்கான ஃபெய்த் ஃபிரீடம் இண்டர் நேசனல் என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.[1][2][3][4][5][6][7][8]
இவர் ஈரானில் பிறந்து வளர்ந்தவர். பாக்கித்தான் மற்றும் இத்தாலியில் படித்தவர், இப்போது கனடாவில் வாழ்பவர். இஸ்லாம் பற்றி இவர் 1990 களில் மக்களிடையே விவாதத்தைத் தொடங்கினார். ஜெருசலேம் போஸ்ட் இதழ் வழியாக தன்கருத்துகளைக் கூறினார். ஜிகாத் என்று சில வெறிபிடித்த முஸ்லிம்களால் காட்டப்படும் சகிப்பின்மைக்கு குரான் போன்ற இஸ்லாமிய நூல்களே அடித்தளமாக இருப்பதாக கருதுகிறார்.[9] சினாவைப்பற்றி ஜெருசலம் போஸ்ட் என்ற இதழ் சினா நடத்திவரும் பெய்த் பிரீடம் என்ற ஒரு இணையதளத்தில் தன்னைப்பற்றி - - இஸ்லாமின் மிகப்பெரிய எதிர்ப்பு பெற்ற உயிரோடு உள்ள நபர் தானே என்கிறார். அவரது அண்மைய புத்தகம் முகம்மதுவை பற்றி அறிவோம், என்ற பெயரில் முகமது நபியின் உளவியல் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியுள்ளார். இதில் முகமது நபி மனக் கோளாறுகளால், தொடர்ந்து அவதிப்பட்டவர் அவை தற்காதல் ஆளுமைக் கோளாறு, பக்க மூளை வலிப்பு, ஆக்ரமிப்பு எண்ணக்-கட்டாயச் செயல் போன்ற இந்தக் கோளாறுகள் முகமது நபிக்கு இருந்ததாக அவர் கூறுகிறார்" என்று எழுதியுள்ளது.[9]
சினா Faithfreedom.org என்ற வலை தளம் மூலமாக, முகமதுவின் நடவடிக்கை குறிப்புகளை பட்டியலிட்டு, முகமது ஒரு தற்காதலர், misogynist, கற்பழிப்புகளை செய்தவர், சின்னஞ்சிறு குழந்தையை தன் காம இச்சைக்கு பயன்படுத்தியவர், காமுகர், மக்களை கும்பல் கும்பலாக கொன்றவர், ஒரு வழிபாட்டுத் தலைவர், திட்டமிட்ட கொலைகாரர், பயங்கரவாதி, வெறிகோண்ட மனிதர், வழிப்பறி கொள்ளைக்காரர் என குறிப்பிட்டு, அவரது குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும் எவருக்கும் $ 50,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.[9]
அக்டோபர் 2010 அன்று ஜெர்மனியில் சுதந்திரக் கட்சியின் தொடக்க நாளின் போது நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவரான கிரீட் வைல்டர்ஸ் தனது உரையில், அலி சினா, கனடாவில் வசிக்கும் ஒரு ஈரானிய இஸ்லாமிய எதிர்பாளர், ஒரு பொன் விதி உள்ளது என்று சுட்டி அது ஒவ்வொரு மதத்தின் இதயமாக அமைந்துள்ளது அது நம்மை பிறர் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, அவ்வாறே பிறரை நாம் நடத்தவேண்டும் என்பதாகும். இஸ்லாமியம் இவ்வாறு நடந்து கொள்வதில்லை தங்க விதியை பின்பற்றுவதில்லை. தங்களுடைய உரிமையை கேட்கும் ஆனால் பிறருக்கு அதை தருவதில்லை. இதுவே இஸ்லாமை தான் எதிர்க்கக் காரணம் என்கிறார் அலிசினா. மேலும் இஸ்லாம் ஒரு மதம் இல்லை, ஆனால் அது மதம் என்ற புனைவில் உள்ள ஏகாதிபத்தியம் மற்றும் ஆதிக்கத்தின் ஒரு அரசியல் சித்தாந்தம். இதனாலேயே அது வன்முறையாளர்களை ஈர்க்கிறது என்கிறார்" ’”[10]
முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றினை எடுக்கும் திரைப்படத்தில் அலிசீனாவும் பங்களித்து வருவதாக 25 செப்டம்பர் 2012 அன்று லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
சீர்திருத்த இஸ்லாம் என்பது சாத்தியமற்றது. இதை பிற மதங்களை சீர்திருத்தியதுபோல் சீர்திருத்த இயலாது என்கிறார்.