அலி ருஸ்தாம் Ali Rustam | |
---|---|
7-ஆவது யாங் டி பெர்துவா மலாக்கா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 ஜுன் 2020 | |
முன்னையவர் | முகமட் காலில் யாக்கோப் |
9-ஆவது மலாக்கா முதலமைச்சர் | |
பதவியில் 3 டிசம்பர் 1999 – 7 மே 2013 | |
தொகுதி | பாயா ரும்புட் புக்கிட் பத்து |
துணை சுகாதார அமைச்சர் | |
பதவியில் 12 நவம்பர் 1996 – 14 டிசம்பர் 1999 | |
தொகுதி | பத்து பிரண்டாம் |
துணை போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 8 மே 1995 – 12 நவம்பர் 1996 | |
தொகுதி | பத்து பிரண்டாம் |
[[மலேசியர் நாடாளுமன்றம்]] பத்து பிரண்டாம் | |
பதவியில் 26 ஏப்ரல் 1995 – 29 நவம்பர் 1999 | |
பெரும்பான்மை | 22,175 (1995) |
சட்டமன்ற உறுப்பினர் Member புக்கிட் பாரு | |
பதவியில் 22 மார்ச் 2004 – 5 மே 2013 | |
பெரும்பான்மை | 5,992 (2004) 2,708 (2008) |
சட்டமன்ற உறுப்பினர் Member பாயா ரும்புட் | |
பதவியில் 30 நவம்பர் 1999 – 21 மார்ச் 2004 | |
பெரும்பான்மை | 2,876 (1999) |
சட்டமன்ற உறுப்பினர் Member சுங்கை ஊடாங் | |
பதவியில் 23 அக்டோபர் 1990 – 24 ஏப்ரல் 1995 | |
பெரும்பான்மை | 6,608 (1990) |
சட்டமன்ற உறுப்பினர் Member ஆயர் மோலேக் | |
பதவியில் 4 ஆகஸ்டு 1986 – 21 அக்டோபர் 1990 | |
பெரும்பான்மை | 7,069 (1986) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகமது அலி பின் முகமது ருஸ்தம் 24 ஆகத்து 1949 மலாக்கா, மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | அம்னோ (UMNO) (1968-இன்று வரையில்) |
பிற அரசியல் தொடர்புகள் | கூட்டணி (1968-1973) பாரிசான் நேசனல் (பாரிசான்) (1974-சூன் 2020) பெரிக்காத்தான் நேசனல் (பெரிக்காத்தான்) (2020-சூன் 2020) முபாகாட் நேசனல் (முபாகாட்) (2020-சூன் 2020) |
துணைவர் | அஸ்மா அப்துல் ரகுமான் |
முன்னாள் கல்லூரி | மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
துன் அலி ருஸ்தாம் அல்லது முகமது அலி ருஸ்தாம் (மலாய்: Haji Mohd. Ali bin Mohd. Rustam; ஆங்கிலம்: Mohd. Ali bin Mohd. Rustam; ஜாவி: محمد علي بن محمد رستم); (பிறப்பு: ஆகஸ்து 24 1949); என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1]
ஜூன் 2020 முதல் மலாக்காவின் 7-ஆவது ஆளுநராக (7th Yang di-Pertua Negeri of Malacca) பணியாற்றியவர். இவர் டிசம்பர் 1999-ஆம் ஆண்டு முதல் 2013 மே மாதம் வரையில் மலாக்காவின் 9-ஆவது முதலமைச்சராகவும் (9th Chief Minister of Malacca) பணியாற்றியவர்.[2]
முகமது அலி ருஸ்தாம்; 24 ஆகஸ்டு 1949-இல், மலாக்காவில் உள்ள கம்போங் புக்கிட் கட்டில் (Kampung Bukit Katil) எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தன் தொடக்கக் கல்வியை புக்கிட் கட்டில் தொடக்கப் பள்ளியில் பெற்றார். இடைநிலைக் கல்வியை செமாபோக் பள்ளியில் (Sekolah Kebangsaan Semabok) பெற்றார்.
மலாக்கா உயர்நிலைப் பள்ளியில் (Malacca High School) தொடர்ந்து படித்து, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Universiti Sains Malaysia) சமூக அறிவியல் இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.[3]
முகமது அலி ருஸ்தாம் 1968-ஆம் ஆண்டில் அம்னோவில் (UMNO) சேர்ந்தார். 2004 முதல் 2009 வரை அதன் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 1986 முதல் மலாக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார். அத்துடன் 1999 டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கி பதினான்கு ஆண்டுகள் மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.[1]
இவர் 1995-ஆம் ஆண்டு தொடங்கி 1999-ஆம் ஆண்டு வரை பத்து பிரண்டாம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். மேலும் 2013 மற்றும் 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்களில் புக்கிட் கட்டில் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனாலும் மக்கள் நீதிக் கட்சியின் வேட்பாளர் சம்சுல் இசுகந்தர் அகின் (Shamsul Iskandar Md Akin) என்பவரிடம் தோல்வி அடைந்தார். புக்கிட் கட்டில் தொகுதி தற்சமயம் அங் துவா ஜெயா (Hang Tuah Jaya) தொகுதி என்று அழைக்கப் படுகிறது.[4]
2010-ஆம் ஆண்டில், முகமது அலி ருஸ்தாம் தலைமையில் மலாக்கா மாநிலம் முழு வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறியது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (Organization for Economic Cooperation and Development) வெளியிடும் 32 வளர்ச்சித் தகுதிகளை மலாக்கா மாநிலம் நிறைவேற்றியது.[5]
அதன் பிறகு அந்தச் செய்தி வெளிவந்தது. முகமது அலி ருஸ்தாம் மலாக்காவின் முதலமைச்சராக இருந்த போது அவரின் பங்களிப்புகளில் மலாக்கா ஆற்றுச் சவாரி (Melaka River Cruise), மலாக்கா நீரிணை பள்ளிவாசல் (Melaka Straits Mosque) மற்றும் தாமிங் சாரி கோபுரம் (Taming Sari Tower) ஆகியவையும் அடங்கும்.[6][7][8][9][10]
முகமது அலி ருஸ்தாம் 5 ஜூன் 2020-ஆம் தேதி மலாக்காவின் 7-ஆவது மலாக்கா யாங் டி பெர்துவா (Yang di-Pertua Negeri of Malacca) ஆளுநர் பொறுப்பை ஏற்றார்.
இவருக்கு முன்னர் முகமது கலீல் யாகோப் (Mohd Khalil Yaakob) என்பவர் மலாக்காவின் மலாக்கா யாங் டி பெர்துவா ஆளுநர் பொறுப்பை 16 ஆண்டுகள் வகித்து வந்தார். மலாக்காவில் பிறந்து மலாக்காவிலேயே வளர்ந்த ஒருவர் மலாக்காவின் மிக உயர்ந்த பதவியை வகிப்பது அதுவே முதல் முறையாகும்.[11]