அலிசர் கரிமோவு Alisher Karimov | |
---|---|
நாடு | தசிகிசுத்தான் |
பிறப்பு | 1997 |
பட்டம் | பிடே மாசுட்டர் (2018) |
உச்சத் தரவுகோள் | 2289 (சூன் 2023) |
அலிசர் கரிமோவு (Alisher Karimov) தசிகிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1997 ஆம் ஆண்டில் பிறந்த இவர் பிடே மாசுட்டர் பட்டத்தை 2018 ஆம் ஆண்டில் பெற்றார்.[1]
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டி உட்பட பல சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் தசிகிசுத்தான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாடு போட்டியில் 4½/9 புள்ளிகளும்[2] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாடு போட்டியில் 6/9 புள்ளிகளும் எடுத்தார்.[3]
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் அலிசர் கரிமோவு விளையாடினார். இப்போட்டியில் முதல் சுற்றில் சியார்ச்சு கோரியிடம் 1½-½ என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.[4] 2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெறும் சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று விளையாடினார். முதல் சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த சதுரங்க வீரர் அவோண்டர் இலியாங்கிடம் போட்டியிட்டு தோற்றுப்போனார்.