![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)அலுமினியம்
| |
வேறு பெயர்கள்
அலுமினியம் அசிட்டைலசிட்டோனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13963-57-0 | |
பப்கெம் | 16683006 |
பண்புகள் | |
AlC15H21O6 | |
வாய்ப்பாட்டு எடை | 324.31 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நிறத் திண்மம்[1] |
அடர்த்தி | 1.42 கி/செ.மீ3 |
உருகுநிலை | 190-193 °செ |
கொதிநிலை | 315 °செ |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Aluminium acetylacetonate) என்பது Al(C5H7O2)3 என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு ஒருங்கிணைவு கூட்டுச் சேர்மம் ஆகும். சுருக்கக் குறியீடாக இதை Al(acac)3, என்றும் அழைக்கிறார்கள். மூன்று அசிட்டைலசிட்டோனேட்டு ஈந்தணைவிகளுடன் கூடிய அலுமினியம் அணைவுச் சேர்மம் அலுமினியம் கொண்டுள்ள சேர்மங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் அசிட்டைலசிட்டோனேட்டு மூலக்கூறு D3 சீரொழுங்குடன், பிற எண்முக டிரிசு(அசிட்டைலசிட்டோனேட்டு)களுடன் சமவடிவமுடைய சேர்மமாகக் காணப்படுகிறது[2].
அலுமினியம் அசிட்டைலசிட்டோனெட்டை,.. உலோககரிமவேதியியல் ஆவிப் படிவைப் பயன்படுத்தி படிக அலுமினியம் ஆக்சைடு படலம் தயாரிக்கின்ற முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்த முடியும் [3]