அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடு (Aluminium hydroxide oxide ) என்பது AlO(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். அலுமினியம் ஆக்சியைதராக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். நன்கு வரையறுக்கப்பட்ட படிக நிலைகள் இரண்டில் ஒன்றாக அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடு காணப்படுகிறது. தயாசுபோர், போய்மைட்டு என்ற கனிமங்களாகவும் இது அறியப்படுகிறது.
தொடர்புடைய சேர்மங்கள் மற்றும் கனிமங்களின் பட்டியல்
கிப்சைட்டு (பெரும்பாலும் γ-Al(OH)3 எனப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் α-Al(OH)3 என்றும் அழைக்கப்படுகிறது. [2] மேலும் சில சமயங்களில் ஐதராகில்லைட்டுஅல்லது ஐதராகைலைட்டு)
பேயரைட்டு (பெரும்பாலும் α-Al(OH)3 என அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் β-Al(OH)3 ஆக கருதப்படுகிறது.