பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் மோனோவசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
கார அலுமினியம் ஓரசிட்டேட்டு, ஈரைதராக்சி அலுமினியம் அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7360-44-3 | |
ChEMBL | ChEMBL3182518 |
ChemSpider | 7969510 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9793743 |
| |
UNII | 60D96IJX3Z |
பண்புகள் | |
(HO)2AlCH3CO2 அல்லது C2H5AlO4 | |
வாய்ப்பாட்டு எடை | 120.04 கிராம்/மோல் |
தோற்றம் | வெண் தூள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் ஓரசிட்டேட்டு (Aluminium monoacetate) என்பது Al(OH)2(CH3COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியமும் அசிட்டிக் அமிலமும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பில் அலுமினியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. செந்தர வெப்ப அழுத்த நிபந்தனைகளில் அலுமினியம் ஓரசிட்டேட்டு திண்ம நிலையில் வெண் தூளாக காணப்படுகிறது. அலுமினியம் மோனோவசிட்டேட்டு, இருகார அலுமினியம் அசிட்டேட்டு, ஈரைதராக்சி அலுமினியம் அசிட்டேட்டு என்ற பல பெயர்களாலும் இவ்வுப்பு அறியப்படுகிறது. [1]
அலுமினியம் ஐதராக்சைடுடன் ( Al(OH)3) நீர்த்த அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் அலுமினியம் ஓரசிட்டேட்டு உருவாகிறது. அலுமினியம் மூவசிட்டேட்டை அடுத்தடுத்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்துவதாலும் இதை தயாரிக்கமுடியும்.[2][3]
நச்சுக்கொல்லியாகவும் மலச்சிக்கல் காரணியாகவும் அலுமினியம் ஓரசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. [4] சிறிய காயங்கள், வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க இது ஒரு கிருமி நாசினியாகப் இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகத் தோல் அரிப்பு, பாதிக்கப்பட்ட தோல் சிதைவு, தோல் வீக்கம் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது, எரிச்சலூட்டும் மற்றும் வீக்கமடைந்த தோல் மீது பூசுவதால் அலுமினியம் ஓரசிட்டேட்டு ஒரு பாதுகாப்பு அடுக்காக உருவாகி உடல் திசுக்களுக்களை காக்கிறது.