அலுமினியம் காலியம் நைட்ரைடு (Aluminium gallium nitride) AlGaN என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு குறைக்கடத்தி சேர்மமாகும். அலுமினியம் நைட்ரைடு மற்றும் காலியம் நைட்ரைடு சேர்மங்களின் கலப்புலோகமாகும். .4eV (xAl=0) முதல் 6.2eV (xAl=1).சூழலில் AlxGa1-xN இன் ஆற்றல் இடைவெளியை அறிய முடியும் [1]. நீலம் முதல் புற ஊதா மண்டலத்தில் செயல்படும் ஒளியுமிழும் இரு முனையங்களில் அலுமினியம் காலியம் நைட்ரைடு பயன்படுத்தப்படுகிறது.
இங்கு அலைநீளம் 250 நானோமீட்டருக்கு குறைவாக அடையப்படுகிரது. நீலக் குறைக்கடத்தி லேசர்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
புறஊதா கதிரியக்க உணரிகளிலும் உயர் எலக்ட்ரான் இயக்க திரிதடையங்களிலும் அலுமினியம் காலியம் நைட்ரைடு பயன்படுத்தப்படுகிறது.
அலுமினியம் காலியம் நைட்ரைடு பெரும்பாலும் காலியம் நைட்ரைடு அலுமினியம் நைட்ரைடுடன் சேர்த்து படிகக்குறைக்கடத்திகளின் அடுக்குகளிடையில் பயன்படும் பல்லினசந்திப்பாகப் பயன்படுகிறது
நீலக்கல்லின் மேற்பரப்பில் அலுமினியம் காலியம் நைட்ரைடு அடுக்குகளை வளர்க்க இயலும்.
அலுமினியம் காலியம் நைட்ரைடு குறைக்கடத்தியின் நச்சுத்தன்மை முழுமையாக அறியப்படவில்லை. எனினும் அலுமினியம் காலியம் நைட்ரைடு தூள் தோல், கண்கள், நுரையீரலில் எரிச்சலை உண்டாக்குகிறது. சுற்றுச்சூழல், உடல்நலம், பாதுகாப்பு அம்சங்கள் சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன [2]