அலெக்சாந்தர் அரோனவிச் குர்சுட்டைன் Alexander Aronovich Gurshtein | |
---|---|
பிறப்பு | மாஸ்கோ | பெப்ரவரி 21, 1937
இறப்பு | ஏப்ரல் 3, 2020 கொலராடோ | (அகவை 83)
தேசியம் | உருசியர் |
பணி | வானியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1959-2010 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வானத்தின் முடிவற்ற இரகசியம் |
அலெக்சாந்தர் அரோனவிச் குர்சுட்டைன் (Alexander A. Gurshtein, உருசியம்: Алекса́ндр Аро́нович Гурште́йн; 21 பெப்ரவரி 1937 – 3 ஏப்ரல் 2020) ஓர் உருசிய வானியலாளரும் அறிவியல் வரலாற்றாசிரியரும் ஆவார்.
இவர் தன் இளவல் பட்டத்தை மாஸ்கோவில் உள்ள சுடெர்ன்பர்கு அரசு வானியல் நிறுவனத்தில் 1966 இல் பெற்றார். தன்முனைவர் பட்டத்தைப் புனித பீட்டர்சுபர்கில் உள்ள புல்கொவோ வான்காணகத்தில் இயற்பியலிலும் கணிதவியலிலும் 1980 இல் பெற்றார்.
இவர் உருசியாவில் விண்வெளித் திட்டங்களில் வானியலாளராக முனைவாகச் செயல்பட்டார். இவர் உருசியக் கல்வி அமைச்சகம் சார்ந்த பல தொழில்முறை நிறுவனங்களில் குறிப்பாக, வானியல் கல்வி மன்ரத் தலைவராகவும் அறிவியல் தொழில்நுட்ப வரலாற்று நிறுவன இணை இயக்குநராகவும் பனிபுரிந்துள்ளார். இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகம் வெளியிடும் அறிவியல் வரலாற்று ஆண்டிதழின் முதன்மை ஆசிரியராக விளங்கினார். மேலும் அதன் கல்வியியல் இதழாகிய இயற்கை எனும் திங்கள் இதழின் இணை முதன்மை ஆசிரியரும் ஆவார். இவர் கோளியலில் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் ஐந்து பதிவுரிமங்கள் பெற்றுள்ளார். மேலும் பல பன்னாட்டு பேரவைகளில் கலந்துகொண்டு பங்களிப்புகள் செய்துள்ளார்.
இவர் 1995 இல் உருசியக் கல்விக்கழகத்தில் இருந்து விலகி, கொலராடோ கிரேண்டு ஜங்சனில் உள்ள மெசா அரசு கல்லூரியின் வானியல், அறிவியல் வரலாற்றுத் துறையின் வருகைப் பேராசிரியர் ஆனார். அண்மையி இவர் விண்மீன்குழுக்களின் வரலாறு குறித்தும் ஓரைமண்டல வரலாறு குறித்தும் பல ஆய்வுகளை அமெரிக்க அறிவியலாளர் இதழிலும் வானமும் தொலைநோக்கியு இதழிலும் பிற தொழில்முறை இதழ்களிலும் எழுதிவருகிறார்.