அலெக்சாந்தர் விசோத்சுகி

அலெக்சாந்தர் விசோத்சுகி.

அலெக்சாந்தர் நிகொலாயெவிச் விசோத்சுகி (Alexander Nikolayevich Vyssotsky; உருசியம்: Алекса́ндр Никола́евич Высо́тский, 23 மே 1888 – திசம்பர் 31, 1973) ஓர் உருசிய அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் உருசியப் பேரரசு காலத்தில் மாஸ்கோவில் பிறந்தார். இவர் தன் பட்டத்தை மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

இவர் அமெரிக்க வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மெக்கார்மிக் வான்காணகத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தபோது பல நூல்களை எழுதியுள்ளார்.இவர் ஐந்து விண்மீன் பட்டியல்கள் அமைந்த கதிர்நிரல் ஒளியளவையால் கண்டறியப்பட்ட எம் வகைகுறுமீன்கள் எனும் அட்டவணை வெளியிட்டு பெயர்பெற்றவர். இது விண்மீன்களின் சீரியக்கத்தைச் சாராமல் அவற்றின் உள்ளார்ந்த கதிர்நிரல் பான்மைகளைக் கொண்டு இனங்காணப்பட்ட அருகாமை விண்மீன்களின் முதல் பட்டியல் என்பதால் மிகவும் முதன்மையானது ஆகும். இதுவரை அருகாமை விண்மீன்கள் அவற்றின் பேரளவு சீரியக்கத்தால் மட்டுமே இனங்காணப்பட்டன. அர்கில் உள்ள விண்மீன்களில் சூரியன் பெருமச் சீரியக்கத்தைப் பெற்றுள்ளது. வுசோத்சுகியின் அட்டவணை வெளியிடுவதற்கு முன்பு இந்த இஅயக்கம் சார்ந்த அணுகுமுறை ஆய்வுகளில் பதக்கூறு சார்புடனேயே அமைந்தன. இவரது வானளக்கை வாழ்சிங்டம் கார்னிகி நிறுவனம் அளித்த 10 அங்குலக் கூக் வான்வரைவியால் செய்யப்பட்டது. இது மீண்டு பெக்கெரால் மறுதிருத்தம் செய்யப்பட்டது. இதி பொருளருகு நோக்கியாக பட்டகம் பயன்பட்டது. இதனால் விண்மீனின் பின்னணியில் உள்ள அனைத்து விண்மீன்களின் மின்காந்தக் கதிர்நிரல் ஒளிப்பொலிவுகளும் அளக்கவியன்றது.இந்தக் கதிர்நிரல்கள் இவரும் பிற ஆய்வாளர்களும் விண்மீன்களை மேற்பரப்பு வெப்பநிலையையும் மேற்பரப்பு ஈர்ப்பையும் வைத்து வகைபாடு செய்ய உதவியது. எனவே இவர்கள் ஆயிரக் கணக்கான முதன்மை வரிசைக் குறுமீன்களைக் கண்டறிய வழிவகுத்தது. இவை மங்கலானவை. 10 அங்குல நோக்கியின் காட்சிக்கு அகப்பட்டதால் மிக அருகாமையிலேயே இருக்க வேண்டும்.

இவர்1929 இல் பிலடெல்பியாவைச் சேர்ந்த, ஒருசாலை வானியலாளராக பணிபுரிந்த, எம்மா வில்லியம்சை மணந்தார். எம்மா வுசோத்சுகி பிறகு வாழ்நாள் முழுவதும் வுசோத்சுகியுடன் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். இவர்களுக்கு விக்தர் ஏ. வுகோத்சுகி என ஒருமன் உண்டு இவரது மகன் ஒரு கணிதவியலாளரும் கணினியியலாளரும் ஆவார். இவரது மகன் மல்டிசு திட்டத்தில் பணிபுரிந்து டார்வின் விளையாட்டு நிரலைஉருவாக்கினார்.

விகோத்சுகி புளோரிடாவைச் சேர்ந்த விண்டர்பார்க்கில் இறந்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]