![]() | |
---|---|
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
டையைதராக்சி அலுமினியம் குளுக்கோனேட்டு; திரிசு(ஐதராக்சிமெத்தில்)அமீனோமீத்தேன் (1:1) | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 13755-41-4 ![]() |
ATC குறியீடு | A02AB06 |
ChemSpider | 28426726 ![]() |
ஒத்தசொல்s | தாசுட்டோ; திரோமெட்டாமோல்குளுக்கோனேட்டு அலுமினியம் |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C10 |
மூலக்கூற்று நிறை | 377.28 |
SMILES | eMolecules & PubChem |
|
அலோகுளுடாமோல் (Aloglutamol ) என்பது C10H24NO12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியச் சேர்மமான இது ஓர் அமிலநீக்கியாகும் [1]. அலுமினியம், குளுக்கோனிக் அமிலம், டிரிசு என்றழைக்கப்படும் 2-அமினோ-2-(ஐதராக்சிமெத்தில்)புரோப்பேன்-1,3-டையால் ஆகியவற்றைச் சேர்த்து அலோகுளுடாமோல் உப்பு தயாரிக்கப்படுகிறது [2][3]. பொதுவாக 0.5 முதல் 1 கிராம் அளவு வரை வாய்வழியாக இதைக் கொடுக்கிறார்கள் [4]. அல்டிரிசு, பைரிசெசு, தாசுட்டோ, சாப்ரோ என்பன இச்சேர்மத்தின் உரிமைப் பெயர்களாக வழக்கில் உள்ளன [4][5].