அலோர் ஸ்டார் (P009) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Alor Setar (P009) Federal Constituency in Kedah | |
![]() கெடா மாநிலத்தில் அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கோத்தா ஸ்டார் மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | அலோர் ஸ்டார் தொகுதி |
முக்கிய நகரங்கள் | அலோர் ஸ்டார் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அப்னான் அமிமி தாயிப் அசாமுதீன் (Afnan Hamimi Taib Azamudden) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 105,994[1][2] |
தொகுதி பரப்பளவு | 111 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Alor Setar; ஆங்கிலம்: Alor Setar Federal Constituency; சீனம்: 亚罗士打联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P009) ஆகும்.[5]
அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே 1955-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), அலோர் ஸ்டார் தொகுதி 52 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[6]
கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[7]
கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[8]
அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் அலோர் ஸ்டார் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
அலோர் ஸ்டார் | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
மலாயா மக்களவை 1955–1959 | 1955–1959 | லீ தியன் இன் (Lee Thean Hin) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) | |
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
மலாயா மக்களவை 1959–1963 | P006 | 1959–1963 | லிம் சூ கோங் (Lim Joo Kong) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
மலேசிய நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P006 | 1963–1964 | லிம் சூ கோங் (Lim Joo Kong) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | லிம் பீ அங் (Lim Pee Hung) | ||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9] | |||
3-ஆவது மக்களவை | P006 | 1971–1973 | லிம் பீ அங் (Lim Pee Hung) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
1973–1974 | பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |||
அலோர் ஸ்டார் | ||||
4-ஆவது மக்களவை | P007 | 1974–1978 | ஓ சின் சன் (Oo Gin Sun) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | 1986–1990 | |||
8-ஆவது மக்களவை | 1990–1995 | சோர் சீ இயூங் (Chor Chee Heung) | ||
அலோர் ஸ்டார் | ||||
9-ஆவது மக்களவை | P009 | 1995–1999 | சோர் சீ இயூங் (Chor Chee Heung) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | 2004–2008 | |||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | கூய் இசியோ லியூங் (Gooi Hsiao-Leung) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
அலோர் ஸ்டார் | ||||
14-ஆவது மக்களவை | P009 | 2018–2022 | சான் மிங் காய் (Chan Ming Kai) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அப்னான் அமிமி அசாமுதீன் (Afnan Hamimi Azamudden) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
அப்னான் அமிமி அசாமுதீன் (Afnan Hamimi Azamudden) |
பெரிக்காத்தான் நேசனல் | 37,486 | 48.69% | + 48.69% ![]() | |
சைமன் ஊய் மின் (Simon Ooi Min) |
பாக்காத்தான் அரப்பான் | 27,555 | 35.79% | - 15.01% ▼ | |
தான் சி இயோங் (Tan Chee Heong) |
பாரிசான் நேசனல் | 8,930 | 11.60% | - 10.58% ▼ | |
முகமது நுகைரி ரகுமத் (Mohamad Nuhairi Rahmat) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 2,383 | 3.10% | + 3.10% ![]() | |
பட்சில் அனாபி (Fadzil Hanafi) |
சபா பாரம்பரிய கட்சி | 366 | 0.48% | + 0.48% ![]() | |
சோபான் பெரோசா யூசோப் (Sofan Feroza Md Yusup) |
சுயேச்சை | 151 | 0.20% | + 0.20% ![]() | |
நோர்டின் யூனோசு (Nordin Yunus) |
சுயேச்சை | 115 | 0.15% | + 0.15% ![]() | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 76,986 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 774 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 209 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 77,976 | 73.6% | - 7.49 % ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 105,994 | ||||
பெரும்பான்மை (Majority) | 9,931 | 12.90% | - 10.88% ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N12 | சுக்கா மெனாந்தி | சொவகிர் அப்துல் கனி (Dzowahir Ab Ghani) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
N13 | கோத்தா தாருல் அமான் | தே சுவீ லியோங் (Teh Swee Leong) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) |
N14 | அலோர் மெங்குடு | முகமது ரடி மாட் சின் (Muhamad Radhi Mat Din) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
{{cite web}}
: CS1 maint: url-status (link)