உருவாக்கம் | 2018 |
---|---|
வேந்தர் | அகமது அசுபாக் கரீம் [1] |
துணை வேந்தர் | சையது மும்தாசுதீன்[1] |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | UGC |
இணையதளம் | www |
அல்-கரீம் பல்கலைக்கழகம் (Al-Karim University) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கட்டிகார் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும் [2]. 2018 ஆம் ஆண்டு அல்-கரீம் கல்வி அறக்கட்டளை பல்கலைக்கழகத்தை நிறுவியது. 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கட்டிகார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையையும் இப்பல்கலைக்கழகம் பராமரிக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது [3]. பீகார் தனியார் பல்கலைக்கழக சட்டம் 2013 இன் கீழ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது [4]. பீகாரில் திட்டமிடப்பட்ட முதல் ஆறு தனியார் பல்கலைக்கழகங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும் [5].
இப்பல்கலைக்கழகம் எம்.பி.பி.எசு படிப்புகள் மற்றும் எம்.டி / எம்.எசு படிப்புகளை பல்வேறு மருத்துவ சிறப்புப் பாடப்பிரிவுகளில் வழங்குகிறது. இங்கு கூடுதலாக கதிரியக்க உருவரைவு மற்றும் ஆப்டோமெட்ரி எனப்படும் பார்வை அளவையியல், முடநீக்கியல் போன்ற பல்வேறு துணை மருத்துவ துறைகளில் 4½ ஆண்டு இளம் அறிவியல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன [6]. உயிர் வேதியியல் மற்றும் உடற்கூறியல் தொடர்புடைய மருத்துவ துறைகளில் 3 ஆண்டு மூன்று ஆண்டு முது அறிவியல் படிப்புகளும், கணினி பயன்பாடு பிரிவில் 3 ஆண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன [7].
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)