அல்மா | |
---|---|
Alma | |
![]() | |
![]() அல்மா நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°21′59″N 100°27′59″E / 5.36639°N 100.46639°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நகரத் தோற்றம் | 1850களில் |
அரசு | |
• யாங் டி பெர்துவா | துவான் அப்துல் சுக்கோர் பின் அப்துல் கனி AMK, BCK |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம் (MST)) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
அஞ்சல் குறியீடு | 12xxx to 14xxx |
அனைத்துலக முன்னொட்டுக் குறி | +6044 (தரைவழித் தொடர்பு) |
இணையதளம் | http://http://mpsp.gov.my/ |
அல்மா என்பது (மலாய்: Alma; ஆங்கிலம்: Alma; சீனம்: 阿儿玛) மலேசியா, பினாங்கு மாநிலத்தில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். புக்கிட் மெர்தாஜாம் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த நகரம், பட்டர்வொர்த் நகரில் இருந்து 26 கி.மீ. கிழக்கே உள்ளது.[1]
அண்மைய ஆண்டுகளில், அல்மா பகுதி மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அல்மா புறநகர்ப் பகுதியில் பல குடியிருப்புகள் பெரிய அளவில் நிறுவப்பட்டு உள்ளன. மக்கள் தொகையின் அதிகரிப்பதற்கு ஏற்ப, இந்தப் பகுதியில் பல வணிக வளாகங்களும் கட்டப்பட்டு உள்ளன.
பினாங்கு விரைவு பேருந்துச் சேவையின் 709 பேருந்துகள் (Rapid Penang 709); மற்றும் பினாங்கு இலவச பேருந்துச் சேவையின் பேருந்துகள் (Central Area Transit); ஜாலான் கூலிம் வழியாக அல்மா நகரைத் தாண்டிச் செல்கின்றன.[2][3]