அல்லசாணி பெத்தண்ணா புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர் ஆவார். [1]. கிருஷ்ணதேவராயனின் அவை புலவர். அஷ்டதிக்கஜங்கள் என அழைக்கப்பட்ட புலவர்களில் முதன்மையானவர். ஆந்திராவின் கவிதை பிதாமகன் என அழைக்கப்பட்டவர். மனுசரிதா[2] எனும் நூலை சமசுகிருதத்தில் இருந்து தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்தார். இவர் ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் அருகில் பிறந்தார் [3][4].