அழியாத கோலங்கள் Azhiyatha Kolangal | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | தேவி பிலிம்ஸ் |
இசை | சலில் சௌதுரி |
நடிப்பு | ஷோபா பிரதாப் போத்தன் கமல்ஹாசன் |
ஒளிப்பதிவு | பாலுமகேந்திரா |
படத்தொகுப்பு | டி. வாசு |
வெளியீடு | திசம்பர் 7, 1979 |
நீளம் | 2966 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழியாத கோலங்கள் (Azhiyatha Kolangal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷோபா, பிரதாப் போத்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாலு மகேந்திரா கன்னட மொழியில் கோகிலா எனும் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும், இது தமிழில் இயக்கிய முதல் படமாகும்.
படத்தின் மையக் கதாபாத்திரங்களில் பாலுறவின் விளிம்பில் இருக்கும் மூன்று வாலிபச் சிறுவர்கள் நடித்துள்ளனர்.[2] அழியாத கோலங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[3]
இப்படத்தின் இரண்டாம் பாகமாக "அழியாத காலங்கள் 2" எனும் திரைப்படம் 29 நவம்பர் 2019 அன்று வெளியானது.
சலில் சௌதுரி அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் கங்கை அமரன் எழுதியுள்ளார்.
# | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | "பூ வண்ணம் போல நெஞ்சம்" | பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா | கங்கை அமரன் |
2 | "கெடச்சா உனக்கு" | எஸ். ஜானகி | |
3 | "நான் என்னும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
4 | "பூ வண்ணம் போல நெஞ்சம்" | பி. சுசீலா |