2020 ஒலிம்பிக் போட்டியில் அவிநாஷ் சாப்ளே | ||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | அவிநாஷ் முகுந்த் சாப்ளே[1] | |||||||||||||||||||
பிறப்பு | 13 செப்டம்பர் 1994 மண்ட்வா, பீடு மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா | |||||||||||||||||||
| ||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 3000 மீட்டர் தடை ஓட்டம் | |||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 3000 மீட்டர் தடை ஓட்டம், 8:11.20 (பர்மிங்கம், ஐக்கிய இராச்சியம்) | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||
6 ஆகஸ்டு 2022 இற்றைப்படுத்தியது. |
நயீப் சுபேதார் அவிநாஷ் சாப்ளே (Avinash Sable) (பிறப்பு: 13 செப்டம்பர் 1994) இந்தியத் தரைப்படையில் நயீப் சுபேதாராக பணியில் உள்ளார். இவரது சொந்த ஊர் மகாராட்டிரா மாநிலத்தின் பீடு மாவட்டத்தில் உள்ள மண்ட்வா கிராமம் ஆகும். இவர் பள்ளிப் படிப்பு முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் 18 வயதில் சேர்ந்தார்.
இவர் தோகாவில் நடைபெற்ற 2019 ஆசிய தடகளப் போட்டியில் 3000 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2022-இல் ஐக்கிய் இராச்சியத்தின் பர்மிங்காம் நகரத்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 3000 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.[3][4][4]இவர் 2020 ஒலிம்பிக் போட்டியில் 3000 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்து கொண்டார்.