அவுட்லையர்சு நூலட்டை | |
நூலாசிரியர் | மால்கம் கிளாட்வெல் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | அல்லிசன் ஜெ. வார்னர் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
பொருண்மை | உளவியல் |
வகை | அபுனைவு |
வெளியீட்டாளர் | லிட்டில், பிரவுன் & கம்பனி |
வெளியிடப்பட்ட நாள் | நவம்பர் 18, 2008 |
ஊடக வகை | வன்னட்டை, மென்னட்டை, ஒலிநூல் |
பக்கங்கள் | 304 பக். |
ISBN | 978-0316017923 |
OCLC | 225870354 |
302 22 | |
LC வகை | BF637.S8 G533 2008 |
முன்னைய நூல் | பிளிங்க், 2005 |
அடுத்த நூல் | வாட் தி டாக் சா, 2009 |
அவுட்லையர்சு: தி இசுடோரி ஆஃப் சக்சஸ் (Outliers: The Story of Success) மால்கம் கிளாட்வெல் எழுதிய மூன்றாம் அபுனைவு நூலாகும். இதனை நவம்பர் 18, 2008இல் லிட்டில், பிரவுன் அன்டு கம்பனி வெளியிட்டது. அவுட்லையர்சு என்ற ஆங்கிலச்சொல் சராசரியிலிருந்து விலகியிருப்பவர்கள்/விலகியிருப்பவை எனப் பொருள்படும். மனிதர்களில் இது மிகத் தோல்வியடைந்தவர்களையும் மிக வெற்றியடைந்தவர்களையும் குறிக்கும். கிளாட்வெல் மிகவும் வெற்றிபெற்றவர்களை எடுத்துக்கொண்டு அவர்களது வெற்றிகளுக்கான காரணங்களை ஆராய்கிறார். தனது கருதுகோளுக்கு ஆதரவாக கனடிய பனி வளைதடியாட்டக்காரர்களில் பெரும்பாலானோர் ஏன் ஆண்டின் முதல் சில மாதங்களில் பிறந்தவராக உள்ளனர் என்றும் எவ்வாறு மைக்ரோசாப்ட் இணை-நிறுவனர் பில் கேட்ஸ் மிகுந்த செல்வத்தை ஈட்டினார் என்றும், எவ்வாறு இசைத்துறையில் பீட்டில்ஸ் மாந்த வாழ்க்கையின் மிக வெற்றியாளர்களாக சாதனை படைத்தார்கள் என்றும் விளக்குகிறார். தொடர்ந்து இசுக்கேடன்,ஆர்ப்சு,இசுலேட்டு,மீகர் & பிளோம் நிறுவனத்தை மிக வெற்றிகரமான சட்ட நிறுவனமாக பிளோம் கட்டமைத்தார், அறிவார்ந்த முடிவு எடுப்பதும், நுண்ணறிவாக உணரப்படுவதற்கும் பெரும்பாலும் எவ்வாறு பண்பாட்டு வேறுபாடுகள் துணை நிற்கின்றன, எவ்வாறு மிகவும் அறிவுள்ள இருவரின் (கிறிஸ்தபர் இலங்கன், ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர்), செல்வச் செழிப்பில் மிகுந்த வேறுபாடுள்ளது என்பனவற்றை ஆராய்கிறார். நூலின் முழுமையும் கிளாட்வெல் திரும்பத் திரும்ப "10,000-மணி விதியை" வலியுறுத்துகிறார். இவரது கூற்றின்படி எந்தவொரு திறமையாளரும் உலகளவில் சாதனை படைக்க முதன்மையான காரணமாக சரியான முறையில் கிட்டத்தட்ட 10,000 மணிநேரம் பயிற்சி செய்தல் தேவையாகும். ஆனால் இந்த ஆய்வின் துவக்கநிலை ஆய்வாளர்கள் கிளாட்வெல்லின் பயன்பாட்டுடன் உடன்படவில்லை.[1]
பதிப்பு வெளியான பிறகு த நியூயார்க் டைம்சின் கூடுதலாக விற்பனையாகும் நூற்பட்டியலில் முதலாவதாக வந்த்து; இதேநிலையில் தொடர்ந்து பதினோரு வாரங்களுக்கு நீடித்தது. த குளோப் அன்டு மெயில் இதழின் மிக உயர்ந்த விற்பனைப் பட்டியலில் முதலாவதாக வந்தது. பொதுவாக நூல் விமரிசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது; இருப்பினும் கிளாட்வெல்லின் மற்ற படைப்புக்களைப் போலன்றி இது மிகவும் தனிநபர் சார்ந்ததாக இருந்ததாக கருதப்பட்டது. சில விமரிசனங்களில் அவுட்லையர்சு எந்தளவிற்கு ஓர் தன்வரலாறு போல உள்ளதென்று விவரிக்கப்பட்டிருந்தது. சிலர் எவ்வாறு கிளாட்வெல் தனது சொந்த வாழ்க்கைப் பின்னணியையும் தொடர்புபடுத்தி நூலின் முடிவுரையை எழுதியிருந்தார் எனப் பாராட்டினர். அவுட்லையர்சில், எழுப்பப்பட்ட கேள்விகளையும் சமூகம் எந்தளவில் தனிநபரின் திறனைப் புறக்கணிக்கிறது என விவரிக்கப்பட்டுள்ளதையும் விமரிசகர்கள் மிகவும் பாராட்டி எழுதினர். இருப்பினும் படித்த பாடங்கள் எதிர்உச்சநிலைக்கு தள்ளி அயர்வடையச் செய்வதாக கருதினர். நூலின் நடை எளிதாக இருப்பினும் சிக்கலான சமூக நிகழ்வுகளை மிகவும் எளிமைப்படுத்தியதாகக் கருதினர்.
அவுட்லையர்சை எழுதிய மால்கம் கிளாட்வெல் தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் இதழியலாளராகப் பணிபுரிந்து வந்தார். பின்னர் தி நியூ யார்க்கர் இதழில் பணிபுரிந்தார். இவற்றில் இவர் எழுதிய கட்டுரைகள் பொதுவாக அபுனைவாக இருந்தன; ரான் போபெய்யின் தகவல்விளம்பர இராச்சியத்திலிருந்து கணினிகள் எவ்வாறு பரப்பிசையை பகுப்பாய்வு செய்கின்றன போன்றத் தலைப்புகளில் எழுதி வந்தார்.[2] கல்விசார் கட்டுரைகளில் இவருக்கிருந்த அறிமுகத்தால் "உளவியல் சோதனைகள், சமூகவியல் ஆய்வுகள், சட்டக் கட்டுரைகள், வானூர்திகளின் விபத்துக்களின் புள்ளிவிவர மதிப்பீடுகள், செவ்வியல் இசைக்கலைஞர்கள், வளைதடிப் பந்தாட்ட வீரர்கள்" குறித்து எழுதலானார். இவற்றை பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையான உரைநடையில் எழுதி வந்தார். இவை பரவலாக போன்மிக்களாகவும் புரிந்து கொள்ளப்பட்டன.[3]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)