புவியியல் | |
---|---|
அமைவிடம் | மெர்சிங் மாவட்டம், ஜொகூர் மலேசியா தென் கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 2°27′00″N 104°31′16″E / 2.45000°N 104.52111°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
பரப்பளவு | 7.2 km2 (2.8 sq mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | ~100 |
அவுர் தீவு (மலாய்: Pulau Aur; ஆங்கிலம்:Aur Island) என்பது மலேசியா, ஜொகூர், மெர்சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். மெர்சிங் நகரத்திற்கு கிழக்கே சுமார் 76 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவு, ஜொகூர் கடல் பூங்காவின் (Johor Marine Park) ஒரு பகுதியாகும். அத்துடன் அவுர் தீவு உண்மையில் ஒரு தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியாகும்.[2]
இந்தத் தீவு மேலும் நான்கு தீவுகளைக் கொண்டது. அவை: டாயாங் தீவு; பினாங்கு தீவு; லாங் தீவு; மற்றும் பெமாங்கில் தீவு. அவை அனைத்தும் ஜொகூர் கடல் பூங்காவின் ஒரு பகுதியாகும்.
இந்தத் தீவில் உளள பவளப்பாறைகள், தடாகங்கள் மற்றும் கடலோரக் குளங்கள்; இதனை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றி இருக்கின்றன. பல ஆண்டுகளாக மீனவர்கள் அடிக்கடி நிறுத்தும் இடமாகவும் இந்தத் தீவு உள்ளது.[3]
அவுர் தீவில் இருந்து 400 மீட்டர் (1,300 அடி) அகலம் கொண்ட குறுகலான கால்வாய் மூலம் பிரிக்கப்பட்ட டாயாங் தீவு எனும் ஒரு சிறிய தீவு உள்ளது. இரண்டு தீவுகளும் சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளின் முக்கிய இடங்களாகத் திகழ்கின்றன. சிங்கப்பூரில் இருந்து மெர்சிங் நகருக்கு வந்து, அங்கிருந்து வாடகைப் படகுகள் மூலம் அவுர் தீவை அடைகிறார்கள்.
தீபகற்ப மலேசியாவின் பிரதான நிலப் பகுதியிலிருந்து தொலைவில் இந்தத் தீவு இருப்பதால், அங்கு தெளிவான கடல் நீர் உள்ளது. அவுர் தீவில் பொதுவாகக் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள்:
தென் சீனக் கடல் மற்றும் மலாக்கா நீரிணையில் இருந்து வீசும் பருவக் காற்றால் அவுர் தீவின் வானிலை பாதிக்கப்படுகிறது. நவம்பர் முதல் மார்ச் வரை தென் சீனக் கடலில் இருந்து வடகிழக்கு பருவமழைக் காற்று வீசுகிறது. மற்றும் அந்தக் காலக்கட்டத்தில், தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் அதிக மழை பெய்யும். இந்த நேரத்தில் கடல் கேளிக்கை நிகழ்ச்சிகள் குறைவாக இருக்கும்.